'காய்ச்சலா... அரசு மருத்துவமனைக்கு வாங்க'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'காய்ச்சலா... அரசு மருத்துவமனைக்கு வாங்க'

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சேலம்: அஸ்தம்பட்டி, சூரமங்கலம் மண்டல பகுதிகளில், 'டெங்கு' மற்றும் பன்றிக் காய்ச்சல் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணியை, கலெக்டர் ரோகிணி, நேற்று, ஆய்வு செய்தார்.
குமாரசாமிப்பட்டி, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், சிகிச்சைக்கு வருவோர் மற்றும் மக்களுக்கு, தொற்று ஏற்படாதபடி கை கழுவும் முறை, கிருமி நாசினி கொண்டு, சுத்தம் செய்யும் பணியை பார்வையிட்டார். மாவட்டத்தில், அனைத்து அரசு மருத்துவமனை வளாகங்கள், கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்படுவதாக தெரிவித்தார். தொடர்ந்து, முல்லைநகரில், வீடு, வீடாக சென்று, காய்ச்சல் தடுப்பு பணியை ஆய்வு செய்தார். அப்போது, இல்லங்களை, சுத்தமாக, சுகாதாரமாக, மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள அறிவுறுத்தினார். காய்ச்சல் பாதிப்பு இருந்தால், உடனடியாக, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும்படி, மக்களிடம் தெரிவித்தார்.

ஆய்வு: வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு, தினமும், 500க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். அங்கு, நேற்று மதியம், மாவட்ட இணை இயக்குனர் சத்யா தலைமையில் அதிகாரிகள், ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, நோயாளிகளுக்கு உரிய முறையில் சிகிச்சையளிக்கப்படுகிறதா, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, எத்தனை பேர் வருகின்றனர் உள்ளிட்டவை குறித்து, மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.

கிருமி நாசினி: வீரபாண்டி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இளங்கோ தலைமையில் சுகாதாரத்துறையினர், நேற்று, ஆட்டையாம்பட்டியில் சினிமா தியேட்டர்கள், மருத்துவமனைகள், ஏ.டி.எம்., மையங்கள், பஸ் ஸ்டாண்ட் ஆகிய இடங்களில், கைப்பிடி கம்பிகளை சுத்தம் செய்து, கிருமிநாசினி தெளித்தனர். கழிவுநீர் தேங்கும் பகுதிகளில், பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X