'கோமாரி நோயால் கால்நடைகள் இறக்காது'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'கோமாரி நோயால் கால்நடைகள் இறக்காது'

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

இடைப்பாடி: ''கோமாரி நோயால், கால்நடைகள் உயிரிழக்காது,'' என, கால்நடைத்துறை மருத்துவப்பணிகள் கூடுதல் இயக்குனர் முகமது உதுமான் பேட்டியளித்தார். சேலம், ஈரோடு மாவட்டங்களில், 100க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்தன. இதனால், ஈரோடு மாவட்டம், அந்தியூர், பவானி; சேலம் மாவட்டம், தேவூர், குள்ளம்பட்டி, இடைப்பாடி பகுதிகளில், கால்நடைத்துறை மருத்துவப்பணிகள் கூடுதல் இயக்குனர் முகமது உதுமான், நேற்று ஆய்வு செய்தார். இடைப்பாடியில், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கால்நடைகளுக்கு, மத்திய அரசு நிதியுடன், 25 சுற்றுகள், கோமாரி நோய் தடுப்பூசி போடப்படுகிறது. இதுவரை, 14 சுற்றுகள் ஊசி போடப்பட்டு, கடந்த செப்., 20 முதல், 15வது சுற்று தடுப்பூசி போடப்படுகிறது. மனிதர்களுக்கு ஏற்பட்டிருந்த இளம்பிள்ளை வாத நோயை முற்றிலும் ஒழித்ததை போன்று, 25 சுற்றுகள் தடுப்பூசி போட்ட பின், இந்நோய் முற்றிலும் ஒழிந்துவிடும். இத்தொடர் சிகிச்சையளிக்க, கால்நடை உதவி மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அதை பார்வையிட, கால்நடை உரிமையாளர்களுடன் பேச, நேற்று(நேற்று முன்தினம்)களஆய்வு செய்யப்பட்டது. கால்நடைகளின் நோய் தாக்கம் குறித்து, தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. நோய் கண்டறியப்பட்டால், அவற்றை தனியாக வைத்து உரிமையாளர்கள் பராமரிக்க வேண்டும். அதை விற்கக்கூடாது. கன்றுக்குட்டிகளுக்கு பால் கொடுக்கக்கூடாது. இந்த நோய்க்கு தேவையான மருந்து இருப்பிலுள்ளதோடு, சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. வாய்ப்புண்ணுக்கு, மருத்துவர்கள் அறிவுரைப்படி சிகிச்சை மேற்கொண்டால், கோமாரி நோயால் உயிரிழப்பு ஏற்படாது. மற்றவைரஸ் கிருமிகளால் தான், உயிரிழப்பு ஏற்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். கூடுதல் இயக்குனர் சவுந்தர்ராஜன், சேலம் மண்டல இணை இயக்குனர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X