முதல்வர் வருகை: அ.தி.மு.க., ஆலோசனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வர் வருகை: அ.தி.மு.க., ஆலோசனை

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேலம்: அ.தி.மு.க., சேலம் மாநகர் மாவட்டம் சார்பில், அங்கம்மாள் காலனியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளர், எம்.எல்.ஏ., வெங்கடாஜலம், அவைத்தலைவர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தனர். எம்.எல்.ஏ., சக்திவேல், முன்னாள் எம்.எல்.ஏ., செல்வராஜூ முன்னிலை வகித்தனர். அதில், வெங்கடாஜலம் பேசியதாவது: முதல்வர் பழனிசாமி, வரும், 14 இரவு, சேலம் வருகிறார். திருவாக் கவுண்டனூர் ரவுண்டானா அருகே, அவருக்கு, வரவேற்பு அளிக்க வேண்டும். அதில், அ.தி.மு.க.,வினர் திரளானோர் பங்கேற்க வேண்டும். மறுநாள், நங்கவள்ளி கூட்டுக்குடிநீர் திட்டத்தை, முதல்வர் தொடங்கி வைத்து, மக்களிடையே பேசுவார். 16ல், இடைப்பாடி தொகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி நலத்திட்ட உதவி வழங்குவார். 17ல், அரசு சார்பில் நடக்கும் விழா, கட்சி நிர்வாகிகள் சார்பில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். 18 காலை, இரும்பாலை பிரிவு சாலையில் கட்டப்பட்ட மேம்பாலத்தை திறந்து வைக்கிறார். இதில், மக்கள், கட்சி தொண்டர்கள் பங்கேற்று சிறப்பிக்க கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். பகுதி செயலாளர்கள் தியாகராஜன், சரவணன், யாதவமூர்த்தி, சண்முகம், பொருளாளர் பங்க் வெங்கடாஜலம், கூட்டுறவு வங்கி தலைவர்கள் துரைராஜ், பெரியபுதூர் கண்ணன் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X