'யோகி ராம் சுரத்குமார் நூற்றாண்டு விழா தபால் உறை வெளியீடு'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'யோகி ராம் சுரத்குமார் நூற்றாண்டு விழா தபால் உறை வெளியீடு'

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

திருவண்ணாமலை: ''பகவான் யோகி ராம் சுரத்குமார் நூற்றாண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு, சிறப்பு தபால் உறை வெளியிடப்பட உள்ளது,'' என்று ஆசிரம ஆயுள் அறங்காவலர் ராமநாதன் கூறினார்.
உத்தரபிரதேச மாநிலம், பலியா மாவட்டம், கங்கை நதிக்கரையில் நர்தரா கிராமத்தில், பகவான் யோகிராம் சுரத்குமார், 1918, டிச.,1ல், பிறந்தார். அவர், 1959ல், திருவண்ணாமலை வந்து, பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்தார். அவரது நூற்றாண்டு ஜெயந்தி விழா, 2017 நவ., முதல், வரும் டிச., 1, வரை, கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, அவரது உருவம் பொறித்த, தபால் உறை வெளியிடப்பட உள்ளது.

இதுகுறித்து, நேற்று ராமநாதன் கூறியதாவது: பகவான் யோகி ராம் சுரத்குமாரின், நூற்றாண்டு விழா உலகமே திரும்பி பார்க்கும் வகையில், கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, என் சகோதரர் ஓய்வு பெற்ற நீதிபதி டி.எஸ்.அருணாசலமும், முரளிதர சுவாமியும் வழிகாட்டி வருகின்றனர். விழாவில், ஆசிரம நுழைவு வாயிலில், 20 அடி ஸ்தூபி நிறுவப்பட்ட நிலையில், அதன் மேல், வெண்கல சிலை அமைக்கப்பட உள்ளது. வரும், 27 முதல், 30 வரை முரளிதர சுவாமிகளின் உபன்யாசமும், டிச., 2ல், பகவான் யோகி ராம் சுரத்குமார் ஜெயந்தி தின சிறப்பு தபால் உறை வெளியீட்டு விழாவும் நடக்க உள்ளது. இதில், தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல் துறை தலைவர் சம்பத் தபால் உறை வெளியிட, முரளிதர சுவாமிகள் பெற்று கொள்கிறார். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது, யோகிராம் சுரத்குமார் ஆசிரமத்தின் ஆயுள் அறங்காவலர்கள் அன்னை விஜயலஷ்மி, மாதேவகி, சுவாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X