சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க அதிகாரி அறிவுரை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க அதிகாரி அறிவுரை

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருவண்ணாமலை: ''டெங்கு, பன்றிக்காய்ச்சலில் இருந்து தப்பிக்க, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள்,'' என்று, சுகாதாரத்துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
திருவண்ணாமலையில், டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் தடுப்பது குறித்த விழிப்புணர்வை நிகழ்ச்சி நடந்தது. இதை, சுகாதாரத்துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். தொடர்ந்து, நிலவேம்பு கஷாயம் குடித்தல், கை கழுவுதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், துண்டு பிரசுரங்களை, பஸ் ஸ்டாண்டில் பொதுமக்களிடம் அவர் வழங்கி பேசியதாவது:பன்றிக்காய்ச்சல் காற்றில் பரவக்கூடியது. பஸ், ஆட்டோ, கார் போன்ற வாகனங்களில் பயணிக்கும்போது, மற்றவர்களுக்கு இருந்தாலும், இவை நம்மை பாதிக்கும். தும்மல் வரும் போதும் பரவும். எனவே, பஸ்சில் பயணிகள் அமரும் இருக்கை, குப்பை சேரும் இடுக்கான பகுதி ஆகியவற்றினை மருந்து தெளித்து சுத்தப்படுத்த வேண்டும். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். மேலும், வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டி தூய்மைப்படுத்துதல் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது, கலெக்டர் கந்தசாமி, மருத்துவ கல்லூரி டீன் ராஜேந்திரன் உள்ளிட்டோர் இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X