புகார் பெட்டி - ஈரோடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - ஈரோடு

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

உடைந்த சிலாப்பை மாற்ற வேண்டும்: கொடுமுடி, ஊஞ்சலூர் பேரூராட்சி, மூன்றாவது வார்டு செல்லாண்டியம்மன் கோவில் வீதி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், வடிகாலில் இணையும் இடத்தில், கான்கிரீட் சிலாப் கல் உடைந்து விட்டது. இரண்டு மாதங்களுக்கு மேலாகியும், இன்னும் சரி செய்யவில்லை. இதனால் இரவில் அவ்வழியாக செல்லும்போது, அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

- ஏ.கே.சண்முகம், ஊஞ்சலூர்.

பல்லாங்குழி சாலையால் அவதி: சென்னிமலை பேரூராட்சி, ஒன்பதாவது வார்டுக்கு உட்பட்ட மணி மலை பகுதியில், பண்ணாரி மாரியம்மன் கோவில் சாலை செல்கிறது. பல இடங்களில் சேதமடைந்து, குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். சாலையில் நடந்து செல்வதே சவாலாக உள்ளது. அவசர மருத்துவ உதவிக்கு, வாடகை வாகன ஓட்டிகள் வர மறுக்கின்றனர். பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- செ.கந்தசாமி, சென்னிமலை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X