மாநகரில் 8 இடங்களில் அடிக்கடி சாலை விபத்து: ஆய்வுக்குப் பின் எஸ்.பி., தகவல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாநகரில் 8 இடங்களில் அடிக்கடி சாலை விபத்து: ஆய்வுக்குப் பின் எஸ்.பி., தகவல்

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

ஈரோடு: ஈரோடு மாநகரில், போக்கு வரத்து நெரிசல் அதிகமாகிக் கொண்டே வருகிறது. வாகன பெருக்கத்துக்கு ஏற்ப, சாலை வசதியில்லை. அதேசமயம் சாலைகளை பெரிய அளவில் விரிவுபடுத்தவும் வழியில்லை. இருக்கும் இடத்தை கொண்டு எந்த அளவுக்கு, சரி செய்ய முடியுமோ அதை உடனடியாக செய்ய, எஸ்.பி., சக்தி கணேசன் தீர்மானித்துள்ளார். இதையடுத்து வாகன போக்குவரத்து இடையூறு, அடிக்கடி விபத்து நடக்கும் இடங்களை, ஆய்வு செய்து வருகிறார்.
ஈரோட்டில் மூலப்பாளையம், காளைமாட்டு சிலை ரவுண்டானா, ரயில்வே ஸ்டேஷன், சூரம்பட்டி நால்ரோடு உள்ளிட்ட இடங்களில், நேற்று ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பின் அவர் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில், 71 இடங்களில் அடிக்கடி விபத்து ஏற்படும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் மாநகரில், எட்டு இடங்கள் உள்ளன. மாநகரில் பாதாள சாக்கடை பணி, பாதாள மின் கேபிள் பதிக்கும் பணி, மேம்பால பணி நடக்கிறது. இதனாலும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து, சில இடங்களில், விபத்து ஏற்பட வாய்ப்பாகிறது. விபத்தை தடுக்க, மூலப்பாளையம் பங்க், காளைமாட்டு சிலை ரவுண்டானா, ரயில்வே ஸ்டேஷன் சாலை, அரசு மருத்துவமனை ரவுண்டானா, சூரம்பட்டி நால் ரோடு, ஸ்வஸ்திக் கார்னர், கருங்கல்பாளையம், மூலப்பட்டறை ஆகிய இடங்களில் சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டு பணிகள் செய்யப்படவுள்ளன. ரயில் நிலையத்தில் இருந்து வெளியேறும் வாகனங்கள், இடையூறின்றி செல்ல, அப்பகுதியில் உள்ள, பெட்ரோல் பங்க் சுற்றுச்சுவரை, சிறிது அகற்ற வேண்டியுள்ளது. உரிய அனுமதி பெற்று பணி செய்யப்படும். மூலப்பாளையத்தில் சிறிய ரவுண்டானா, மற்ற இடங்களில் நெடுஞ்சாலை துறையுடன் இணைந்து வேகத்தடை, சென்டர் மீடியன் அமைப்பது, சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை விரிவுபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல் பவானி, பெருந்துறை, கோபி, சத்தி, அந்தியூர் பகுதிகளில், ஆய்வு நடத்தி, போக்குவரத்து நெரிசலை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு எஸ்.பி., கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X