தாளவாடி மலைப்பகுதியில் கடும் பனிமூட்டம்: 10 மணி வரை நீடிப்பதால் திண்டாட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தாளவாடி மலைப்பகுதியில் கடும் பனிமூட்டம்: 10 மணி வரை நீடிப்பதால் திண்டாட்டம்

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சத்தியமங்கலம்: தாளவாடி மலைப்பகுதியில், கடும் பனிமூட்டம் நிலவுவதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், திண்டாட்டத்துக்கு ஆளாகியுள்ளனர். சத்தியமங்கலத்தை அடுத்த, தாளவாடி மலைப் பகுதியில், 50க்கும் மேற்பட்ட கிராமங்களில், மக்கள் வசித்து வருகின்றனர். தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்நிலையில், தாளவாடி சுற்றுவட்டார பகுதிகளில், சில நாட்களாக காலை மற்றும் மாலையில், மூடுபனி கடுமையாக உள்ளது. சூரியன் உதித்த பிறகும், 10:00 மணி வரை பனிமூட்டம் நீடிக்கிறது. இதனால் அதிகாலை வேளைகளில், வீட்டை விட்டு மக்கள் வெளியில் வருவதில்லை. பஸ்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் அனைத்தும், முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே செல்கின்றன. ஆனாலும், கடும் பனிமூட்டத்தால் எதிரில் வரும் வாகனங்கள் சரிவரத் தெரிவதில்லை. இதனால் மிகுந்த எச்சரிக்கையுடன், மெதுவாக இயக்கி வருவதாக, வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X