அதிகாரிகள் கவனத்திற்கு - ஈரோடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - ஈரோடு

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சேதமான மின்கம்பம் மாற்றப்படுமா? அந்தியூர், பர்கூர் பஞ்சாயத்து, பர்கூரிலிருந்து தாமரைக்கரை - கர்ககேண்டி செல்லும் சாலையில், போக்குவரத்து அதிகமுள்ளது. இந்த சாலையில் உள்ள, மின்கம்பங்களில் சில சேதமாகி சிமென்ட் கான்கிரீட் பெயர்ந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. உடையும் நிலையில் உள்ள, இந்த மின்கம்பங்களை மாற்ற, முறையிட்டும், எந்த நடவடிக்கையும் இல்லை. மின்வாரியத்துறை பெரும் அசம்பாவிதம் நிகழும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எச்சரிக்கை அவசியம்: ஈரோடு குற்றாலமாக கொடிவேரி தடுப்பணை திகழ்கிறது. ஆனாலும், நிஜ குற்றாலத்தை விட, அவ்வப்போது உயிர் பலி ஏற்படுவது, வேதனையாக உள்ளது. தடுப்பணையில் குளிக்க வரும் பலர், எச்சரிக்கையாகவே இருப்பதில்லை. ஆபத்தை உணராமல், நீச்சல் தெரியாமல் குளிக்கின்றனர். இதனால் தண்ணீரில் மூழ்கி, இன்னுயிரை இழந்து, குடும்பத்தினர், உறவினர்களை சோகத்தில் ஆழ்த்துகின்றனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஆபத்தான இடங்களில், எச்சரிக்கை பலகை வைத்தால் நல்லது.

புதர்மண்டிய சாக்கடை: பவானி யூனியன், தொட்டிபாளையம் ஊராட்சி, மோளகவுண்டன்புதூர் காலனிவாசிகளின், குடியிருப்பு கழிவு நீர் செல்ல, சாக்கடை கட்டப்பட்டுள்ளது. சில மாதங்களாக, சாக்கடையை தூர்வாராததால், கழிவு நீர் தேங்கி, புதராக மாறி, கொசு உற்பத்திக்கு வழிவகுத்துள்ளது. சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளதாக, குடியிருப்புவாசிகள் குமுறுகின்றனர். ஊராட்சி நிர்வாகம், மெத்தனம் காட்டாமல் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

பூங்காவில் குப்பை; செடி ஜோரா வளருது: ஈரோடு வ.உ.சி., பூங்கா வளாகத்தில், மாநகராட்சி பகுதி மக்களுக்கு வழங்க, குடிநீர் ஏற்றும் தரைத்தள தொட்டி உள்ளது. அதன் அருகே, பூங்காவில் சேகரமாகும் குப்பையை மலை போல் குவித்து வைத்துள்ளனர். சமீபத்தில் பெய்யும் தொடர் மழையால், குப்பையில் செடிகள் முளைத்து, பசுந்தரை போல் மாறி வருகிறது. இதனால் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. அவற்றை இயற்கை உரமாக்கலாம். அல்லது அகற்றலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X