இன்று டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2 தேர்வு: மாவட்டத்தில் 20,151 பேர் விண்ணப்பம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்று டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2 தேர்வு: மாவட்டத்தில் 20,151 பேர் விண்ணப்பம்

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஈரோடு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால், தொகுதி-2 நேர்காணல் பதவிகள் அடங்கிய பல்வேறு பதவிகளுக்கு முதல் நிலை எழுத்து தேர்வு, இன்று நடக்கிறது.
ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு, பவானி, கோபி ஆகிய மூன்று தேர்வு மையங்களில் நடத்தப்படுகிறது. ஈரோட்டில், 10 ஆயிரத்து, 508 பேர், பவானியில், 4,682 பேர், கோபியில், 4,961 பேர் என, 20 ஆயிரத்து, 151 பேர் தேர்வு எழுதுகின்றனர். மொத்தம், 76 மையங்களில் தேர்வு நடக்கிறது. தேர்வை கண்காணிக்க, எட்டு பறக்கும் படை, 11 நடமாடும் குழு, 61 ஒளிப்பதிவாளர்கள், 76 கண்காணிப்பு அலுவலர்கள் ஈடுபடுகின்றனர். ஈரோடு மாவட்ட கருவூலம், பவானி மற்றும் கோபி சார்நிலை கருவூலங்களில் வினாத்தாள், விடைத்தாள் வைக்கப்பட்டுள்ளது. இங்கு, ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்வு எழுதுவோர் வசதிக்காக, போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் தடையின்றி மின்சாரம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக, கலெக்டர் கதிரவன் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X