சென்னிமலை முருகன் கோவில் தரம் உயருமா? பக்தர், ஊழியர்கள் எதிர்பார்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சென்னிமலை முருகன் கோவில் தரம் உயருமா? பக்தர், ஊழியர்கள் எதிர்பார்ப்பு

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சென்னிமலை: வருவாய் கூடி வரும் நிலையில், சென்னிமலை முருகன் கோவிலை, முதுநிலை கோவிலாக தரம் உயர்த்த, பக்தர்கள் தரப்பில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய தலமான, சென்னிமலை முருகன் கோவில், தமிழக அளவில் பிரசித்தி பெற்ற, மலைக்கோவிலாக உள்ளது. பிற மாநில மக்களும் அதிக அளவில் தற்போது வருகின்றனர். அதேசமயம் பண்டிகை நாட்களிலும், செவ்வாய்கிழமை தோறும், உள்ளூர், வெளியூர் பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது. ஆண்டு வருமானம், மூன்று கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஆண்டு வருமானம், 50 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தாலே, முதுநிலை கோவிலாக (உதவி ஆணையர் கிரேடு) அறிவிப்பு செய்யலாம். அப்படி செய்தால், கோவிலுக்கான வசதிகள் அதிகரிக்கும். நிதி ஒதுக்கீடு அதிகரிக்கும். பணியாளர் சம்பளமும் உயரும். தற்போது, குறைந்த அளவு பணியாளர்கள், தினக்கூலி அடிப்படையில் பணி செய்கின்றனர். கோசாலை பராமரிப்பு, அன்னதான திட்டம் செயல்பாடு, டிக்கெட் வசூல், படி வழியாக எருது மூலம் திருமஞ்சனம் கொண்டு செல்லும் பணி, காவல் பணி, என அனைத்திலும், தினக்கூலிகளே உள்ளனர். முதுநிலை கோவிலாக தரம் உயர்த்தினால், கூடுதல் பணியாளர்கள் கிடைப்பார்கள். பக்தர்கள் வருகை மற்றும் கோவில் வருவாய் அதிகரித்தும், மலை அடிவாரத்தில், டிக்கெட் கவுன்டர் இல்லை. பக்தர்கள் மலை மீது செல்ல, பல சமயங்களில் பஸ்சுக்கு காத்திருக்க, உரிய வசதியில்லை. பக்தர்கள் தங்கும் விடுதியில், அலுவலகம் செயல்படுகிறது. முதுநிலை கோவிலாக தரம் உயர்த்தி, பக்தர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, தேவையான வசதிகள் செய்து தர, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X