கலெக்டர் அலுவலக புதிய கூடுதல் கட்டடம்: தரைத்தளம் அமைக்க பிரமாண்ட குழி தோண்டும் பணி தீவிரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கலெக்டர் அலுவலக புதிய கூடுதல் கட்டடம்: தரைத்தளம் அமைக்க பிரமாண்ட குழி தோண்டும் பணி தீவிரம்

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், கூடுதல் கட்டடம் கட்டும் பணியில், தரைத்தளம் அமைக்க, பிரமாண்ட குழி வெட்டப்படுகிறது.
ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில், ஏற்கனவே, ஏழு தளங்கள் கொண்ட பிரமாண்ட கட்டடம் உள்ளது. இருப்பினும், ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆர்.டி.ஓ., அலுவலகம், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, சி.இ.ஓ., அலுவலகம் என உள்ளன. இவற்றை ஒரே வளாகத்துக்குள் கொண்டு வரும் வகையில், தற்போதைய பழைய கட்டடத்தின் பின்புறம், கூடுதல் கட்டடம் அமைக்க திட்டமிட்டனர். கடந்த ஜூன், 10ல், 41.6 கோடி ரூபாய் மதிப்பிலான கூடுதல் கட்டடத்துக்கு பூமி பூஜை நடந்தது. இதற்காக மாற்றுத்திறனாளிகள் மற்றும் சமூக நலத்துறை அலுவலகங்கள், வாகன நிறுத்தங்கள், கேன்டீன் என பல்வேறு பழைய கட்டடங்கள் முழுமையாக இடித்து அகற்றிவிட்டு, கட்டடம் கட்டும் பணி துவங்கியது. அங்கிருந்து சில அலுவலகம், கலெக்டர் அலுவலக பிரதான கட்டடத்துக்கு மாற்றப்பட்டது. இப்பகுதி முழுமையாக பாறையாக உள்ளது. தவிர அவ்வப்போது பலத்த மழை பெய்ததால், பாறைகளை இடித்து அகற்றும் பணி தாமதமாகிறது. தற்போது, தரைத்தளத்தில் அமையவுள்ள, இரண்டு தளங்களுக்காக, 30 அடி ஆழத்துக்கு குழிகள் தோண்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து பொறியாளர்கள் கூறியதாவது: பழைய கட்டடங்களை இடித்து அகற்றியதும், இரண்டு தரைத்தளம், ஏழு மாடி என, ஒன்பது மாடி அமையும் வகையில், பள்ளம் அமைக்கப்படுகிறது. இரண்டு தரைத்தளமும், வாகன நிறுத்தமாக அமையும். ஈரோட்டில் பல இடங்களில் உள்ள, 32 துறை அலுவலகங்களும், இங்கு அமையும் வகையில் திட்டமிடப்படுகிறது. தற்போது, ஒரு புறம், 30 அடி வரையிலும் தோண்டப்பட்டுள்ளது. பிற பகுதி சமமாக அமையும் வகையில் குழி அமைக்கப்படுகிறது. டிச., முதல் வாரத்தில் பைல் பவுண்டேஷன் மூலம் பில்லர் அமைத்து, கட்டுமான பணிகள் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. பத்து மாதத்தில் பணிகளை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X