குடிநீர் பற்றாக்குறையால் அவதி: மெத்தன அதிகாரிகள் மீது அதிருப்தி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குடிநீர் பற்றாக்குறையால் அவதி: மெத்தன அதிகாரிகள் மீது அதிருப்தி

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தர்மபுரி: ஒகேனக்கல் குடிநீர் வராததால், பல மணிநேரம் குடிநீருக்காக மக்கள் காத்துக்கிடக்கின்றனர். தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தாலுகாவுக்கு உட்பட்ட கொலசன ஹள்ளி பஞ்., அத்துரானஹள்ளியில் ஏராளமான வீடுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள மக்களுக்கு, ஒகேனக்கல் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. கடந்த, ஆறு மாதத்துக்கு முன், ஒகேனக்கல்லில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், இங்கு வழங்கப்பட்ட குடிநீர் நிறுத்தப்பட்டது. இதனால், கிராம மக்கள் அருகேவுள்ள ஆழ்துளை கிணற்றில் குடிநீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர். தற்போது, ஆழ்துளை கிணறும் வற்றியதால், குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், இரண்டு குடம் தண்ணீர் நிரம்பவே, பல மணி நேரம் காத்திருக்கும் நிலையுள்ளது. இதுகுறித்து, பஞ்., செயலாளர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், பலமுறை மனு கொடுத்தும், இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே, தண்ணீர் பற்றாக்குறையை போக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X