டெங்குவை தடுக்க இ.கம்யூ., கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

டெங்குவை தடுக்க இ.கம்யூ., கோரிக்கை

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தர்மபுரி: 'டெங்குவை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, இண்டூரில் நடந்த, இ.கம்யூ., வட்டார நிர்வாகக்குழு கூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இண்டூரில், இ.கம்யூ., வட்டார நிர்வாக குழு கூட்டம், நிர்வாக குழு உறுப்பினர் ரத்தினவேல் தலைமையில் நடந்தது. இதில், மாவட்ட செயலாளர் தேவராசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மாதேஸ்வரன், சின்னசாமி ஆகியோர் பேசினர். இண்டூரை தனி ஒன்றியமாக அறிவிக்க வேண்டும். இண்டூர், தளவாய்ஹள்ளி ஏரிகளில் உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும். இண்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், சித்தா பிரிவு துவங்க வேண்டும். இண்டூர், பண்டஹள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், மருந்து, மாத்திரைகள் இல்லாமல், நோயாளிகள் பாதிப்பதை தடுக்க வேண்டும். இப்பகுதிகளில், டெங்கு, மர்ம காய்ச்சல் பரவுவதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X