பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி பலி: உறவினர்கள் மறியல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி பலி: உறவினர்கள் மறியல்

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அரூர்: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இறந்தார். தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த, சிட்லிங்கை சேர்ந்த, 17 வயதுடைய மாணவி, பாப்பிரெட்டிப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த வாரம் விடுமுறையில் வீட்டுக்கு வந்த மாணவி, கடந்த, 5ல் மதியம், 2:00 மணிக்கு, இயற்கை உபாதை கழிக்க, வீட்டின் வெளியே சென்றார். அதே பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் சதீஷ், 22, ரமேஷ், 22, ஆகியோர், மாணவியை பலாத்காரம் செய்தனர். மாணவியின் சத்தம்கேட்டு, அப்பகுதி மக்கள் வந்ததால், வாலிபர்கள் தப்பியோடினர். இதுகுறித்து, கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடந்த, 7ல், தர்மபுரி காப்பகத்தில் மாணவியை தங்க வைத்தனர். அவருக்கு, உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, நேற்று காலை மாணவி இறந்தார். மாணவியை பலாத்காரம் செய்தவர்களை கைது செய்யக்கோரி, கோட்டப்பட்டி-சிட்லிங் சாலையில், நேற்று காலை, 10:00 மணிக்கு, மக்கள் மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன், அரூர் ஆர்.டி.ஓ., புண்ணியக்கோடி, டி.எஸ்.பி., செல்லப்பாண்டியன் ஆகியோர் நடத்திய சமாதானப் பேச்சு வார்த்தை தோல்வியடைந்தது. தொடர்ந்து மக்கள் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X