மின்வாரிய ஊழியர்களுக்கு நிலவேம்பு கஷாயம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மின்வாரிய ஊழியர்களுக்கு நிலவேம்பு கஷாயம்

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஓசூர்: ஓசூரில், மின்வாரிய ஊழியர்கள் மற்றும் பயணிகளுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது. ஓசூர் பகுதியில் டெங்கு பாதிப்பு தென்படுவதால், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மின்வாரிய ஊழியர்களுக்கு, ஓசூர் மின்வாரிய செயற்பொறியாளர் குமார், நிலவேம்பு கஷாயத்தை, நேற்று ஊழியர்கள் அனைவருக்கும் வழங்கினார். உதவி செயற்பொறியாளர்கள் ரங்கநாதன், பழனி, உதவி இன்ஜினியர்கள் சின்னதம்பி, பூபாலன் உட்பட பலர் பங்கேற்றனர்.* ஓசூர் நகர தி.மு.க., சார்பில், பஸ் ஸ்டாண்டுக்கு வரும் பயணிகளுக்கு, நிலவேம்பு கஷாயத்தை, மாவட்ட செயலாளர் பிரகாஷ் வழங்கினார். நகர பொறுப்பாளர் சத்யா, தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், இலக்கிய அணி அமைப்பாளர் எல்லோராமணி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X