ஆரோக்கிய பாரத சைக்கிள் பயணத்துக்கு வரவேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆரோக்கிய பாரத சைக்கிள் பயணத்துக்கு வரவேற்பு

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஓசூர்: ஓசூருக்கு வந்த ஆரோக்கிய பாரத சைக்கிள் பயணத்துக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் சார்பில், காந்தியின், 150 வது பிறந்த நாளை முன்னிட்டு, ஆரோக்கிய பாரத பயணம் என்ற பெயரில், தொடர் சைக்கிள் பயணம் துவங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான உணவை உண்ணுதல், சத்தான மற்றும் ஆரோக்கியமான, செரியூட்டப்பட்ட உணவுகளை உட்கொள்ளுதல் என்பதை வலியுறுத்தி, சைக்கிள் பயணம் துவங்கப்பட்டுள்ளது. கடந்த மாதம், 16ல், திருவனந்தபுரத்தில் இருந்து துவங்கிய சைக்கிள் பயணம், எல்லை பகுதியான, ஓசூருக்கு நேற்று வந்தது. அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி, உணவு பாதுகாப்பு ஆணையர் அமுதா, கலெக்டர் பிரபாகர், உணவு பாதுகாப்பு இணை ஆணையர் வனஜா மற்றும் அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, சைக்கிள் பயணத்தில் பங்கேற்றவர்களுக்கு, பாராட்டு சான்றிதழ், நினைவு பரிசுகளை, அமைச்சர் வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X