புகார் பெட்டி - கரூர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - கரூர்

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாய்கள் நடமாட்டத்தால் அவதி: கரூர் அருகே, கரியாளி நகரில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில், 100க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித் திரிகின்றன. சாலையோரங்களில் குவிந்துள்ள குப்பையை தினமும் அள்ளி அகற்றாததே இதற்கு காரணம். இரவு நேரங்களில் நாய்கள், தெருவில் செல்வோரை கடிக்க விரட்டுகின்றன. வாகனங்களில் செல்வோரையும் விடுவதில்லை. இருசக்கர வாகனங்களில் செல்வோர் தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.

- என்.செந்தில்குமார், கரியாளி நகர்.

குப்பை எரிவதை தடுக்க வேண்டும்: கரூர்-வாங்கல் சாலையில், நகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கு உள்ளது. அங்கு, இரவு நேரத்தில், திடீரென குப்பையில் தீப்பிடித்து எரிகிறது. இதனால், அரசு காலனி உள்ளிட்ட பகுதிகளில், கடும் புகை மூட்டம் ஏற்படுகிறது. முதியவர்கள், குழந்தைகள் தூங்க முடியாமல் தவிக்கின்றனர். இதுபோல், தொடர்ந்து நடப்பதால், அப்பகுதி மக்கள், நுரையீரல் மற்றும் சுவாச பாதிப்புகளுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது. கிடங்கில் குப்பை எரிவதை தடுக்க வேண்டும்.

- என். ஆனந்த், அரசு காலனி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X