மானாவாரி கம்பு வயலில் கூடுதல் உழவுப் பணி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மானாவாரி கம்பு வயலில் கூடுதல் உழவுப் பணி

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் பரவலாக சாகுபடி செய்யப்பட்டுள்ள மானாவாரி கம்பு பயிர்களின் வளர்ச்சிக்காக, கூடுதல் உழவு பணியை விவசாயிகள் மேற்கொண்டனர். கிருஷ்ணராயபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளான வேங்காம்பட்டி, மத்திப்பட்டி, புணவாசிப்பட்டி, வரகூர், குழந்தைப்பட்டி, பஞ்சப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், மானாவாரி பயிராக கம்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன் பெய்த மழையால், இப்பயிர்கள் செழித்து வளர்ந்துள்ளன. பயிர்கள் மேலும் நல்ல முறையில் வளர்வதற்காக, அவற்றுக்கு நடுவே, கூடுதல் உழவு செய்யும் பணியில் அப்பகுதி விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம், களைப் பயிர்கள் வளர்ச்சி கட்டுப்படுத்தப்பட்டு, கம்பு பயிர் வளர்ச்சி சீராக இருக்கும், மகசூல் அதிகரிக்கும் என, விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X