பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள்

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

கரூர்: கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு வரும், 13 முதல், பள்ளி, மாணவ மாணவியருக்கு, பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடக்கிறது என, மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரூர் மாவட்டத்தில், கூட்டுறவு வார விழா வரும், 14 முதல், 20 வரை நடக்கிறது. அதை முன்னிட்டு வரும், 13 காலை, 10:00 மணிக்கு, கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கரூர் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில், பள்ளி மாணவ, மாணவியருக்கு, பேச்சு, கட்டுரை, ஓவியப்போட்டிகள் நடக்கின்றன. இதில், ஆறாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள், 'நலிந்தோருக்கான கூட்டுறவு' என்ற தலைப்பில், ஒன்பதாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், 'கிராமப் பொருளாதாரத்தில் கூட்டுறவின் பங்கு' என்ற தலைப்பில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, 'இயற்கை வேளாண்மை மற்றும் செலவில்லா வேளாண்மை' என்ற தலைப்பில், பேச்சு, கட்டுரைப் போட்டி நடக்கிறது. மேலும், ஆறாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு 'கூட்டுறவு' என்ற தலைப்பில், ஓவியப் போட்டி நடக்கிறது, போட்டிகளில் பங்கு பெற விரும்பும் மாணவ, மாணவியர், பள்ளி தலைமையாசிரியர் மூலம், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் அலுவலகம், ஒருங்கிணைந்த கூட்டுறவு வளாகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், தான்தோன்றிமலை, கரூர். தொலைபேசி எண், 04324255138 என்ற முகவரியில், நாளைக்குள் நேரிலோ, தொலைபேசியிலோ, பகல், 11:00 மணி முதல், மாலை, 4:00 மணி வரை பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X