அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

நிழற்கூடத்தை சரிசெய்ய வேண்டும்: கரூர் ஜவஹர் பஜாரில், தாலுகா அலுவலகம், கிளைச் சிறை மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளன. இதனால், அப்பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். காலை, மாலை நேரங்களில், வாகனங்களில் செல்ல முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர். எனவே, போக்குவரத்தை சீர் செய்ய, இப்பகுதியில் போக்குவரத்து போலீசார் பணி அமர்த்தப்பட்டனர். அதற்காக, நிழற்கூடம் அமைக்கப்பட்டது. அந்த நிழற்கூடம் சேதமடைந்த நிலையில் உள்ளது.
சாலையில் பள்ளம்; பயணம் தாமதம்: கரூர் - மதுரை சாலையில் உள்ள ஆண்டாங்கோவில் பிரிவில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அவற்றில், 1,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இச்சாலை வழியாக, தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்நிலையில், இங்குள்ள சாலை, பல மாதங்களாக குண்டும், குழியுமாக உள்ளது. மேலும், மழைக்காலத்தில், சேதமடைந்த நிலையில் உள்ள இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்குவது வாடிக்கையாக நடக்கிறது.

குப்பை குவிப்பு; சுகாதாரம் இழப்பு: கரூர் சிண்டிகேட் நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், குப்பை அள்ளும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த சில நாட்களாக, அப்பகுதி சாலையோரங்களில் குப்பை குவிந்துள்ளது. அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குப்பையிலிருந்து வீசும் துர்நாற்றத்தால், சாலை வழியாக செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். குப்பையை தினமும் அள்ளி சுகாதாரமாக இருக்கும்படி, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திறந்த நிலையில் இணைப்பு பெட்டி: கரூர் ஏ.வி.ஆர்., நகரில் குடியிருப்புகள் உள்ள பகுதியில், தொலைபேசி இணைப்பு பெட்டி உள்ளது. தாழ்வான நிலையில் உள்ள பெட்டிகளில் உள்ள இணைப்புகள் சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும், அத்தகைய பெட்டிகள் மூடப்படாமல் திறந்த நிலையில் உள்ளது. அதை, தெருவில் விளையாடும் குழந்தைகள் சேதம் செய்துவிடும் அபாயம் உள்ளது. திறந்த நிலையில் பழுதடைந் துள்ள பி.எஸ்.என். எல்., இணைப்பு பெட்டிகளை முறையாக பராமரிக்க வேண்டும்.

ஆழ்துளை குழாய் பழுதானதால் அவதி: கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் அருகே, பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ஆழ்துளை குழாய் அமைக்கப்பட்டது. இக்குழாய் பல மாதங்களாக பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் அன்றாட பயன்பாட்டுக்கு வேண்டிய தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். தண்ணீருக்காக, அருகில் உள்ள பகுதிக்கு செல்வதால், தினசரி பணிகள் பாதிக்கப்படுகின்றன. அங்கும் ஆழ்துளை குழாயில் தண்ணீர் வர நீண்ட நேரம் ஆகிறது. ஆழ்துளை குழாயை சீரமைக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X