மணல் கொள்ளைக்கு 'குண்டாஸ்': காவிரி பாதுகாப்பு இயக்கம் மனு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மணல் கொள்ளைக்கு 'குண்டாஸ்': காவிரி பாதுகாப்பு இயக்கம் மனு

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: மணல் கொள்ளைக்கு துணை போகும் அதிகாரிகள் மீது, குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தினர், கலெக்டர் அன்பழகனிடம் மனு கொடுத்தனர்.
அதில், கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டம், குளித்தலை அருகே, ராஜேந்திரத்தில் அரசு மணல் கிடங்கு உள்ளது. அங்கு காவிரி ஆற்றில் இருந்து மணல் கொண்டு வந்து வினியோகம் செய்யப்படுகிறது. இங்கு கிடங்கு அமைக்க அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை. மேலும் மணல் விற்பனை நிலையத்திற்கு அனுமதி கேட்டு விண்ணப்பமும் செய்யப்படவில்லை என, தெரியவந்துள்ளது. பொதுப் பணித்துறை அதிகாரிகள் இந்த சட்டவிரோத மணல் கிடங்கை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில், நெரூர் வடபாகம் பகுதியில், தினமும் பல லாரிகளில் மணல் கடத்தப்படுகிறது. புஞ்சை புகளூர் பகுதியில் மொபட் மூலம் மணல் எடுத்து வந்து, லாரிகளில் கடத்தப்படுகிறது. மணல் கொள்ளைக்கு துணை போகும் அதிகாரிகள் மீது, குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, கரூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் விற்பனை நிலையம் நடத்தி, மணல் கொள்ளைக்கு துணை போகும் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மீது, குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X