புறம்போக்கு நிலத்திற்கு பட்டா கூடாது: ஆய்வு கூட்டத்தில் அறிவுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புறம்போக்கு நிலத்திற்கு பட்டா கூடாது: ஆய்வு கூட்டத்தில் அறிவுறுத்தல்

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குளித்தலை: குளித்தலை ஆர்.டி.ஓ., லியாகத் தலைமையில், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூர் தாலுகா பகுதி ஆர்.ஐ., வி.ஏ.ஓ., சர்வேயர், மண்டல தாசில்தார் ஆகியோர் பங்கேற்ற, பணி முன்னேற்றம் குறித்து ஆய்வுக் கூட்டம் நடந்தது. ஆர்.ஐ., வி.ஏ.ஓ., சர்வேயர்கள், பொதுமக்கள் வழங்கும் மனுக்களான பட்டா மாற்றம், வாரிசு சான்றிதல், இருப்பிட சான்றிதல் ஆகியவற்றை தாமதிக்காமல் வழங்க வேண்டும். விவசாயிகள் பயிரிட்டுள்ள பயிர் ரகங்களை முறையாக பதிவு செய்யவேண்டும். அரசு புறம்போக்கு நிலத்திற்கு வீட்டு மனைப் பட்டா வழங்கக் கூடாது. ஏரி, குளம், குட்டை பகுதியில், தனிநபர் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு வருவாய் துறை சார்பில், எந்த வித சான்றிதழும் வழங்கக் கூடாது. அரசு திட்டங்கள் குறித்து, பொதுமக்களுக்கு அவ்வப்போது தெரிவிக்க வேண்டும். அலுவலர்கள் அலுவலகத்தில் இருந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும், மழைக்காலம் தொடங்கி விட்டதால், வருவாய் துறையினர் முன்னேற்பாடு நடவடிக்கைகளை முழு வீச்சில் செய்ய வேண்டும் என, கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X