விசாரணைக்கு வந்தவர் மீது தாக்குதல்: குளித்தலை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பரபரப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விசாரணைக்கு வந்தவர் மீது தாக்குதல்: குளித்தலை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பரபரப்பு

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குளித்தலை: குளித்தலையை அடுத்த, மருதூர் அருகே, குப்புரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் சந்திரன், 45, இவர் சில மாதங்களுக்கு முன்னர் நடந்த ஜமாபந்தியில், இனுங்கூர் கிராமத்தில் நத்தம் நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களுக்கு, எச்.எஸ்.டி., பட்டா வழங்கியுள்ளதை ரத்து செய்யக்கோரி மனு கொடுத்தார். அந்த மனு மீதான விசாரணைக்காக சந்திரன் மற்றும் பட்டா பெற்ற சிலரை ஆர்.டி.ஓ., அழைத்திருந்தார். அதற்காக, நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு, சந்திரன் ஆர்.டி.ஓ., அலுவலகம் சென்றார். இந்த அலுவலகத்தில், ஏற்கனவே நேர்முக உதவியாளராக பணியாற்றி, தற்போது நெடுஞ்சாலை துறை தனிதாசில்தாராக உள்ளவர் மகாமுனி. நத்தம் நிலம் ஆக்கிரமிப்பு புகார் சம்பந்தமாக இவருடைய உறவினர்களும் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இதனால், ஆத்திரமடைந்த மகாமுனி, அலுவலகம் வந்த சந்திரனை தகாத வார்ததையால் திட்டி, இருக்கையில் இருந்த கட்டை எடுத்து தாக்கியுள்ளார். அதில் காயமடைந்த அவர், குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கொடுத்த புகாரின் படி, குளித்தலை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X