'எல்லோரும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆக முடியாது': போக்குவரத்து துறை அமைச்சர் காட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'எல்லோரும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆக முடியாது': போக்குவரத்து துறை அமைச்சர் காட்டம்

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: ''எல்லோரும் முதல்வராக நினைக்கின்றனர். ஆனால், எல்லோரும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆக முடியாது,'' என, போக்குவரத்துதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
கரூரில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக போக்குவரத்து கழகங்கள் மூலம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இயக்கப்பட்ட சிறப்பு பஸ்களில், ஆறு லட்சம் பேர் பயணம் செய்வர் என எதிர்பார்த்தோம். ஆனால், 7.25 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். சர்கார் திரைப்படம் வருமானத்திற்காக எடுக்கப்பட்ட படம். மிக்ஸி, கிரைண்டர் போன்ற இலவச பொருட்களை தீயில் போட்டவர்கள், முன்னாள் முதல்வர் கருணாநிதி கொடுத்த இலவச, 'டிவி'யை தீயில் போட வேண்டியதுதானே. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, இலவச பஸ் பாஸ், லேப் டாப் போன்ற ஏராளமான நலத்திட்ட உதவிகளை, பள்ளி மாணவர்களுக்கு வழங்கியிருக்கிறார். எல்லோரும் முதல்வராக நினைக்கின்றனர். ஆனால், எல்லோரும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆக முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X