14 போலீசாருக்கு பதவி உயர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

14 போலீசாருக்கு பதவி உயர்வு

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டத்தில், 14 போலீசாருக்கு எஸ்.எஸ்.ஐ., யாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. தமிழக காவல்துறையில், 1993ல் காவலராக பணியில் சேர்ந்தவர்களுக்கு தற்போது, எஸ்.எஸ்.ஐ.,யாக பதவி உயர்வு வழங்கப்படுகிறது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில், நல்லிபாளையம் ஸ்டேஷன் அசோகன், ரவிக்குமார், எஸ்.பி.சி.ஐ.டி., மனோகரன், நாமக்கல் நெடுஞ்செழியன், குமாரபாளையம் மணிமுத்து, திருச்செங்கோடு ரூரல் மாதேஸ்வரன், வெண்ணந்தூர் சுந்தரராஜன், ஜெயக்குமார், வேலூர் போக்குவரத்து சீனிவாசன், எலச்சிபாளையம் சுப்பையன், வேலகவுண்டம்பட்டி சுப்ரமணியம், பேளுக்குறிச்சி ரவி, ஏ.ரவி, வாழவந்திநாடு சுரேஷ் ஆகியோர், கடந்த மாதம், 24ம் தேதியுடன் பதவி உயர்வு பெற தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்கு, கடந்த, 1ல் இருந்து பதவி உயர்வு வழங்கி, எஸ்.பி., அருளரசு ஆணை வழங்கியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X