டெங்கு, பன்றி காய்ச்சல் கண்காணிப்பு: மாவட்டத்தில் 45 மருத்துவ குழு நியமனம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

டெங்கு, பன்றி காய்ச்சல் கண்காணிப்பு: மாவட்டத்தில் 45 மருத்துவ குழு நியமனம்

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்: ''டெங்கு, பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்தி கண்காணிக்க, நாமக்கல் மாவட்டத்தில், 45 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன,'' என, சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் சேகர் கூறினார்.
தமிழகத்தில், டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நோடல் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, நாமக்கல்லுக்கு நியமிக்கப்பட்டுள்ள பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர் (பயிற்சி) சேகர், நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று, திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, நிருபர்களிடம் அவர் கூறியதாவது: அடுத்த இரு மாதங்களுக்கு, காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தொடரும் வகையில், 45 மருத்துவ குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். பன்றி காய்ச்சலுக்குரிய மாத்திரைகள், 15 ஆயிரம் இருப்பு உள்ளன. அதேபோல், ஊசியும், 2,000 இருக்கிறது. மாவட்டத்தில், டெங்கு, பன்றி காய்ச்சல் என்ற அச்சுறுத்தல் இல்லை. டாக்டர், நர்ஸ் உட்பட, ஒரு குழுவுக்கு, ஐந்து பேர் வீதம், 45 குழுக்களில், 300 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார். மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் உஷா, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ரமேஷ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

76 பேர் 'அட்மிட்': இணை இயக்குனர் சேகர் கூறுகையில், ''நாமக்கல் அரசு மருத்துவமனையில், பன்றிக்காய்ச்சலால் இருவர், டெங்கு காய்ச்சலால் ஒரு சிறுவன் மற்றும் சாதாரண காய்ச்சல் உட்பட, 76 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X