போலீசார் வழங்கிய நிலவேம்பு கஷாயம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

போலீசார் வழங்கிய நிலவேம்பு கஷாயம்

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ப.வேலூர்: ப.வேலூர் போலீசார் நிலவேம்பு கஷாயம் வழங்கினர். ப.வேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளிகள், பஸ் ஸ்டாண்ட், அரசு மருத்துவமனை ஆகிய பல்வேறு இடங்களில் சுகாதாரத்துறை சார்பில் செயல்படுத்தப்படுகிறது. இந்நிலையில், போலீசாருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ப.வேலூர் போலீஸ் ஸ்டேஷனில், போலீசாருக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இன்ஸ்பெக்டர் லட்சுமணகுமார் கஷாயம் வழங்கினார். அனைத்து மகளிர் போலீசார், போக்குவரத்து போலீசார் மற்றும் மக்கள் கலந்து கொண்டனர். அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் ஆசைத்தம்பி பேசினார்.* குமாரபாளையம் போலீசார் மற்றும் 'விடியல் ஆரம்பம்' அமைப்பு சார்பில், மக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் தேவி, விடியல் அமைப்பாளர் பிரகாஷ் தலைமை வகித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X