அதிகாரிகள் கவனத்திற்கு - நாமக்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - நாமக்கல்

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

பகலில் எரியும் மின்விளக்கு: குமாரபாளையம் தம்மண்ணன் வீதி, உடையார் பேட்டை பிரிவு நான்கு சாலை சந்திப்பு பகுதியில் உள்ள மின் கம்பத்தில், மின் விளக்கு நாள் முழுவதும் எரிந்து கொண்டிருந்தது. மின்சார சிக்கனம் தேவை என, மின்வாரியத்தால் பிரசாரம் செய்யப்படும் வேளையில், இது போல் மின்சாரம் வீணாவதை கண்டு, மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இதற்கு காரணமானவர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோல், பல இடங்களில் மின் விளக்குகள் பகலில் எரிகின்றன.
சேதமடைந்த தார்ச்சாலை: பள்ளிபாளையம் அடுத்த, எஸ்.பி.பி.காலனி, ரவுண்டானா அருகே சாலையின் மையப்பகுதி சேதமடைந்திருந்தது. தற்போது மண், கற்கள் கொட்டி சமன்படுத்தப்பட்டுள்ளது. வாகனங்கள் தொடர்ந்து செல்வதால், அவை பெயர்ந்து, மீண்டும் சேதமடைந்து வருகின்றன. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இரவு நேரத்தில் டூ வீலரில் செல்வோர் நிலை தடுமாறுகின்றனர். எனவே, சேதமடைந்த பகுதியை சீரமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மண்சரிவால் விபத்து அச்சம்: மல்லசமுத்திரம் ஒன்றியம், வண்டிநத்தத்தில் இருந்து, சீத்தகாடு செல்லும் சாலையோரத்தில், மண்சரிவுடன் கூடிய, பள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும், சாலை குறுகலாக காணப்படுவதால், எதிரெதிரே கனரக வாகனங்கள் வரும்போது, ஒதுங்க வழியின்றி பள்ளத்தில் விழுந்து, விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. மின் விளக்குகள் இல்லாததாலும், சாலை எது, பள்ளம் எது என தெரியாமல், வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழும் சம்பவம் அரங்கேறிய வண்ணம் உள்ளது.

பயன்படாத குப்பை தொட்டி: பள்ளிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட, வெப்படையில் சாலையோரத்தில் குப்பை கொட்ட இரும்பு தொட்டி வைக்கப்பட்டிருந்தது. இது தற்போது குப்பை போல் வீசப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் சாலையோரத்தில் திறந்தவெளியில் குப்பையை கொட்டுகின்றனர். இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. துர்நாற்றமும் வீசுகிறது. இதே நிலையில் தொட்டி இருந்தால், விரைவில் சேதமடைந்து விடும். குப்பை தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

பஸ் ஸ்டாண்ட் வெளியே பள்ளம்: குமாரபாளையம், பஸ் ஸ்டாண்ட் வெளிப்புற பகுதியில் பெரிய பள்ளம் உள்ளது. பஸ், கார், டெம்போக்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் நிலைதடுமாறுகின்றன. குறிப்பாக, மழைக்காலங்களில், தண்ணீர் தேங்கி நிற்பதால், இரு சக்கர வாகனங்கள், விபத்தை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து, பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன், இதை சீரமைக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X