'தண்ணீர் வரவில்லை': விவசாயிகள் கவலை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'தண்ணீர் வரவில்லை': விவசாயிகள் கவலை

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பள்ளிபாளையம்: கடந்த சில நாட்களாக கடைமடைக்கு தண்ணீர் வராததால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
மேட்டூர் கிழக்கு கரை வாய்க்காலில் ஆண்டுதோறும், ஆகஸ்ட் மாதம் தண்ணீர் வரும். இதை பயன்படுத்தி விவசாயிகள் சாகுபடி செய்வர். கடந்த, இரண்டு ஆண்டுகளாக போதிய மழை பெய்யாததால், பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்தாண்டு, ஜூலை, 22ல் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில் மாம்பாளையம், புதுப்பாளையம், எளையாம்பாளையம், வண்ணாம்பாறை, மோளகவுண்டம்பாளையம், களியனூர் உள்பட பல பகுதிகளில், வாய்க்கால் தண்ணீரை பயன்படுத்தி, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. பிரதான வாய்க்காலில் இருந்து, மதகு வழியாக கிளை வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டு, வயல்வெளிகளின் கடைமடை வரை தண்ணீர் செல்லும். இந்நிலையில், மோளகவுண்டம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் கடந்த சில நாட்களாக கடைமடை வரை தண்ணீர் வரவில்லை என, விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, மோளகவுண்டம்பாளையத்தை சேர்ந்த விவசாயி பன்னீர்செல்வம் கூறுகையில், ''கடந்த ஒரு வாரமாக கடைமடை வரை தண்ணீர் வரவில்லை. இதுகுறித்து, கலெக்டருக்கும் மனு அனுப்பியுள்ளேன். கடைமடை வரை செல்லும் வகையில் தண்ணீரை திறக்க வேண்டும்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X