மண்வள அட்டைப்படி உரமிட இணை இயக்குனர் அறிவுரை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மண்வள அட்டைப்படி உரமிட இணை இயக்குனர் அறிவுரை

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்: தேசிய மண் வள அட்டை இயக்கத்தின் கீழ், முன்னோடி கிராமங்களில், மண் வள அட்டை அடிப்படையில், உரங்கள் வினியோகம் செய்வது குறித்த விழிப்புணர்வு கூட்டம், நாமக்கல் வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில் நடந்தது.
வேளாண் இணை இயக்குனர் சேகர் பேசியதாவது: மண் வள அட்டையின் மூலம், விவசாயிகள் தங்கள் மண்ணில் உள்ள சத்துகளை அறிய முடியும். உரச்செலவை குறைத்தும், உர விரயத்தை தவிர்த்தும், மண் வளத்தை பாதுகாக்க, மண்வள அட்டையில் குறிப்பிட்டுள்ளபடி, உரங்களை பயிர்களுக்கு இடவேண்டும். உர விற்பனையாளர்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க செயலாளர்கள், விவசாயிகளுக்கு, மண்வள அட்டையின் மூலம், உரங்களை வினியோகம் செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். வேளாண் துணை இயக்குனர் அசோகன் பேசுகையில், ''சேந்தமங்கலத்தில், பொன்னார்குளம் பிட்.1, எருமப்பட்டியில் வடவத்தூர், பள்ளிபாளையத்தில், அய்யம்பாளையம் அக்ரஹாரம் ஆகியவை முன்னோடி கிராமங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. அங்கு மண் ஆய்வு முடிவுக்கு ஏற்ப, மண்வள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி உரமிடும்போது, உரச்செலவு குறைவதுடன், அதிக மகசூல் பெறலாம்,'' என்றார். உதவி இயக்குனர் கவிதா, முன்னோடி விவசாயிகள், கூட்டுறவு கடன் சங்க செயலாளர்கள், தனியார் உர விற்பனையாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X