நவ.,15ல் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

நவ.,15ல் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்

Added : நவ 11, 2018 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
தமிழகம், மிக கனமழை, இந்திய வானிலை மையம், கஜா புயல், ரெட் அலர்ட்

புதுடில்லி : கஜா புயல் உருவானதை தொடர்ந்து நவ., 15ம் தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 15ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிக மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், கடலோர ஆந்திரா மற்றும் கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை மையம் இன்று (நவ.,11) காலை வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதியில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கிலிருந்து வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக வங்கக்கடல் பகுதியில் கஜா புயல் உருவாகி உள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயல் சின்னமாக வலுப்பெற்று மேற்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகரக்கூடும். அடுத்த 36 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் ஆந்திரா நோக்கி நகரக் கூடும். பின்னர் வலுவிழந்து தென் தமிழகம் மற்றும் ஆந்திராவுக்கு அருகே நவ.,15 ல் கரையை கடக்கும்.
இதன் காரணமாக நவ.,14 ,ல் தமிழகம் மற்றும் தெற்கு கடலோர ஆந்திராவில் கனமழையும், நவ.,15 ல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் மிக கனமழை முதல் கனமழை பெய்யக்கூடும். குறிப்பாக, நவ., 15ம் தேதியில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திரா மற்றும் கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம். நவம்பர் 16 முதல் 18 வரை தமிழகம், கேரளா, ஆந்திர கடலோர பகுதிகளில் பரவலாக மழை பெய்யும், தெற்கு கர்நாடகா, ராயலசீமா, ஆந்திரா, அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகியவற்றில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
11-நவ-201819:21:31 IST Report Abuse
Pugazh V நம்ம ரமணன் சார் சர்வீஸ் ல இருந்தா லீவ் விட்றுவார்.
Rate this:
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
11-நவ-201818:12:23 IST Report Abuse
jagan "கஜா " டுபாய் கூட்கிட்டு போறேன் என்று சொல்லி கொச்சின் இறக்கி விடுவார் ...அதே போல் தான் வேறு எங்காவது பெய்யும்
Rate this:
Share this comment
Cancel
NVRAMANAN - london,யுனைடெட் கிங்டம்
11-நவ-201815:30:41 IST Report Abuse
NVRAMANAN வினோதமான எச்சரிக்கை,ஒண்ணும் நடக்காது,அப்படியே மழை பெய்து ஊர் மூழ்கடித்து வெள்ளம் வந்தாலும்,குடி நீர் கொடுக்கும் ஏரி ஒண்ணு கூட நிரம்ப போவது கிடயாது,மொத்த தன்னியும் கடலுக்கு போய் பத்திரமா போய் கலக்க போவது உண்மை .லாரிகளில் தண்ணி கொடுத்து அதில் கொள்ளை அடிக்கும் கும்பலுக்கு எப்போதுமே கொள்ளை லாபம். இதுதான் நாம் தமிழ் நாடு..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X