ரத யாத்திரையை தடுப்பவர்கள் தலைகள் நசுக்கப்படும் : பா.ஜ., பெண் தலைவர் மிரட்டல்| Dinamalar

ரத யாத்திரையை தடுப்பவர்கள் தலைகள் நசுக்கப்படும் : பா.ஜ., பெண் தலைவர் மிரட்டல்

Added : நவ 11, 2018 | கருத்துகள் (52)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பா.ஜ., ரத யாத்திரை, லாக்கெட் சாட்டர்ஜி, தலைகள் நசுக்கப்படும்

மட்லா : பா.ஜ., நடத்தும் ரத யாத்திரையை தடுக்க முயற்சிப்பவர்களின் தலைகள் ரதத்தின் சக்கரத்தில் வைத்து நசுக்கப்படும் என அக்கட்சியின் பெண் தலைவரும், நடிகையுமான லாகெட் சாட்டர்ஜி பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் டிசம்பர் 5,6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் பா.ஜ., சார்பில் ரத யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கட்சி தலைவர் அமித்ஷா துவக்கி வைக்க உள்ள இந்த ரத யாத்திரை 42 லோக்சபா தொகுதிகளை உள்ளடக்கியதாக இருக்கும். ரத யாத்திரையின் முடிவில் கோல்கட்டாவில் பிரம்மாண்ட பொதுக் கூட்டம் நடத்தப்பட உள்ளதாகவும், இதில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த ரத யாத்திரை குறித்து பேசிய லாகெட் சாட்டர்ஜி, மேற்குவங்கத்தில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதே இந்த ரத யாத்திரையின் நோக்கம். ஏற்கனவே நாங்கள் கூறியதை போன்று இந்த ரத யாத்திரையை தடுக்க முயற்சிப்பவர்களின் தலைகள் ரதத்தின் சக்கரத்தில் வைத்து நசுக்கப்படும் என்றார். திரிணாமுல் காங்.,கின் பர்தா சாட்டர்ஜி, பா.ஜ., தலைவர்கள் மேற்கு வங்கத்தின் அமைதியை சீர்குலைக்க முயல்வதாகவும், மேற்குவங்கத்தை மத ரீதியாக பிரிக்க நினைக்கும் பா.ஜ.,வினரை மக்கள் அனுமதிக்கமாட்டார்கள் எனவும், இந்த பிரித்தாளும் அரசியலை தடுப்போம் என கூறியதற்கு பதில் அளித்த லாகெட் சாட்டர்ஜி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரத்தினம் - Muscat,ஓமன்
12-நவ-201810:57:13 IST Report Abuse
ரத்தினம் இந்தியா அழிவை நோக்கி போகுதுன்னா அதுக்கு காரணம் ஓட்டுக்காக கடைப்பிடிக்கப்படும் போலி மதசார்பின்மை.
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
12-நவ-201810:46:15 IST Report Abuse
Malick Raja காலம் பதில் சொல்லுமே
Rate this:
Share this comment
Cancel
rambo - Manamadurai,இந்தியா
12-நவ-201809:03:29 IST Report Abuse
rambo பிஜேபி என்றுமே மதம் எனும் போர்வைக்குள் இருந்து கொண்டு ஆரியர்களை தூக்கிப் பிடித்து கொண்டும்.. பிற மதத்தவரை இழித்தும் பழித்தும் பேசியும்.. கோயிலை நாசம் செய்தும்.. பின் அதே கோயிலை வைத்து மக்களை ஏமாற்றியும் ஒரு கேடு கெட்ட அரசியலை செய்யும் கட்சி.. காங்கிரஸ் ஊழல் செய்தாலும் இதுபோன்ற ஒரு பாதக செயலை என்றுமே செய்ததில்லை.. இந்த வெறியர்களுக்கு அந்த ஊழல் வாதிகள் எவ்வளவோ தேவலாம்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X