முதல்வர் பழனிசாமி மீது துரைமுருகன் தாக்கு Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
முதல்வர் பழனிசாமி மீது
துரைமுருகன் தாக்கு

சென்னை : 'முதல்வர் பழனிசாமி, தமிழக பா.ஜ.,வின் அறிவிக்கப்படாத தலைவராகியுள்ளார்,'' என, தி.மு.க., பொருளாளர், துரைமுருகன் கூறியுள்ளார்.

முதல்வர்,பழனிசாமி,துரைமுருகன்,தாக்கு


அவரது அறிக்கை: 'ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம், பாலாறு பிரச்னை பற்றி, ஸ்டாலினும், துரைமுருகனும் ஏன் பேசவில்லை' என, பாலாறு வரலாறு தெரியாமல், முதல்வர் பழனிசாமி பேசியுள்ளார். 'தமிழகத்திற்கும், ஆந்திராவிற்கும், எந்த பிரச்னையும் இல்லை.

நாங்கள் கோதாவரி நீரை கூட, தமிழகத்திற்கு கொடுப்போம்' என, ஸ்டாலினை சந்தித்தபின், சந்திரபாபு நாயுடு பேட்டியளித்தார்.

அப்படியென்றால், நாங்கள் பாலாறு பற்றியும், அவரிடம் பேசினோம் என்றே அர்த்தம். அதுகூடத் தெரியாமல், பழனிசாமி பேசியுள்ளார். அவர், பாலாறு பிரச்னையில், சட்டரீதியாகவும், பேச்சு ரீதியாகவும் அடைந்த படுதோல்வியை மறைக்க, பா.ஜ.,வின் ஊது குழலாக மாறி, அக்கட்சியின் அறிவிக்கப்படாத மாநில தலைவராகியிருக்கிறார்.

கூட்டணி அமைப்பதில், தி.மு.க., வெளிப்படத்தன்மை நிறைந்த கட்சி என்பது, திடீரென, கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரான முதல்வர் பழனிசாமிக்கு தெரியாது. குறைந்த பட்ச செயல் திட்டத்தை உருவாக்கி,

Advertisement

தேசிய ஜனநாயகக் கூட்டணியில், தி.மு.க., இடம் பெற்றது.

பா.ஜ.,விற்கும், பிரதமர் மோடிக்கும் கை கட்டி வாய்பொத்தி நின்று, அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து, மாநில உரிமைகளை அடகு வைத்து விட்டு, திரைமறைவில், நாங்கள் கூட்டணி வைத்துக் கொண்டிருக்கவில்லை. இவ்வாறு துரைமுருகன் கூறியுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ocean - chennai,இந்தியா
15-நவ-201815:16:15 IST Report Abuse

oceanகோதாவரி பற்றி பேசினால் பாலாறு பற்றி பேசியதாக அர்த்தமா.

Rate this:
ocean - chennai,இந்தியா
15-நவ-201815:11:53 IST Report Abuse

oceanஇன்னும் காட்பாடி தொகுதி பின் தங்கிய தொகுதியாகவே உள்ளது. துரை முருகன் வளர்ந்தார் ஆனால் அவரது தொகுதி வளரவில்லை.

Rate this:
ocean - chennai,இந்தியா
15-நவ-201815:02:42 IST Report Abuse

oceanதன்னை படிக்க வைத்து ஆளாக்கிய எம்.ஜி.ஆருக்கே திமுகவில் சேர்ந்து டாடா காட்டியவர்.

Rate this:
மேலும் 42 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X