கேரள டி.எஸ்.பி., தற்கொலை| Dinamalar

கேரள டி.எஸ்.பி., தற்கொலை

Added : நவ 13, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 கேரள டி.எஸ்.பி., தற்கொலை

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில், கொலை வழக்கில் தேடப்பட்ட, டி.எஸ்.பி., ஹரி குமார், தற்கொலை செய்து கொண்டான்.கேரள மாநிலத்தில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தின், திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள, நெய்யாற்றின்கரை பகுதி, டி.எஸ்.பி.,யாக பணியாற்றியவன், பி.ஹரி குமார்.சமீபத்தில் இவன், நெய்யாற்றின்கரையில், சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்தி வைத்திருந்த, சனால் குமார் என்பவரிடம், வாகனத்தை எடுக்கும்படி கூறினான்.அப்போது, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஹரி குமார், ஓடும் வாகனத்தின் முன், சனால் குமாரை தள்ளியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர், பின், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த சம்பவம், மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, டி.எஸ்.பி., பதவியில் இருந்து, ஹரி குமாரை, 'சஸ்பெண்ட்' செய்து, கேரள மாநில காவல் துறை உத்தரவிட்டது.இந்த சம்பவத்திற்கு பின், ஹரி குமார் தலைமறைவானான்; தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டான். அவனை, போலீசார் தேடி வந்தனர்.இந்நிலையில் நேற்று, டி.எஸ்.பி., ஹரி குமார், கல்லம்பலம் பகுதியில் உள்ள தன் வீட்டில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். இது குறித்து, போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
manivannan - chennai,இந்தியா
14-நவ-201810:59:33 IST Report Abuse
manivannan வீட்டிலேயும் சரியா கொடுத்திருப்பாங்க ஒரு படித்த ஆஃபீசருக்கு ஒரு தவறு செய்தவரை எப்படி நடத்த வேண்டுமென்று தெரியாதா. அவ்வளவு என்ன ஆத்திரம், அகம்பாவம்? ஒரு வாகனத்தை நிறுத்திய தவறுக்காக ஒருவரை ஓடும் வண்டிக்கு முன்னாள் தள்ளுவதா? சரியான சாட்சி இருந்திருக்கும் இல்லாட்டா ஏன் தற்கொலை பண்ணிக்கறான்...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-நவ-201808:44:12 IST Report Abuse
Srinivasan Kannaiya தவறை உணர்ந்தார் உயிரை துறந்தார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X