இதே நாளில் அன்று| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இதே நாளில் அன்று

Added : நவ 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 இதே நாளில் அன்று


நவம்பர் 14, 1889

ஜவஹர்லால் நேரு: உ.பி., மாநிலம், அலகாபாதில், மோதிலால் நேரு -- சுவரூப ராணி தம்பதிக்கு, 1889 நவ., 14ல் பிறந்தார். பிரிட்டன் கேம்ப்ரிட்ஜ் மற்றும் ட்ரினிட்டி கல்லுாரியில், சட்டப்படிப்பை முடித்தார். நாடு திரும்பிய அவர், சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார்; காந்தியின் நம்பிக்கைக்குரியவராக இருந்தார்.

ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றதால், 1920ல், முதன்முதலாக கைது செய்யப்பட்டு, சிறிது காலம் சிறையில் அடைக்கப்பட்டார். 1924ல், அலகாபாத் நகராட்சி தலைவராக தேர்தெடுக்கப்பட்டார். 1926 -- 1928 வரை, அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலராக பணியாற்றினார்.

நாடு சுதந்திரம் பெற்றதும், முதல் பிரதமரானார். பஞ்சசீல கொள்கையை உருவாக்கி, உலக அமைதிக்கு பாடுபட்டார். குழந்தைகள் மீது, அதிக பற்று கொண்டவர். அவர் பிறந்த நாள், குழந்தைகள் தின விழாவாக கொண்டாடப்படுகிறது. 1964 மே, 27ல் காலமானார். அவர் பிறந்த தினம் இன்று.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X