சபரிமலை வழக்கை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு| Dinamalar

சபரிமலை வழக்கை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

Added : நவ 14, 2018 | கருத்துகள் (40)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Sabarimala Ayyappan Temple,Sabarimala, Supreme Court,சபரிமலை, சுப்ரீம் கோர்ட், அவசர வழக்கு,  சுப்ரீம் கோர்ட் மறுப்பு,  சபரிமலை அய்யப்பன் கோயில் ,அனைத்து வயது பெண்கள், நீதிபதி ரஞ்சன் கோகாய் , 
 Supreme Court refusal,  Justice Ranjan Kokai,

புதுடில்லி : சபரிமலை அய்யப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உத்தரவுக்கு எதிரான மனுக்களை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என செப்.,28 ம் தேதி சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து சீராய்வு மனுக்கள், அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் சீராய்வு மனுக்களை விசாரணைக்கு ஏற்பதாக அறிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், ஜனவரி 22 ல் விசாரிக்கப்படும் என கூறி உள்ளது.

நவம்பர் 16 மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோயில் நடை திறக்கப்பட உள்ளதால் இந்த வழக்குகளை அவசரமாக விசாரிக்கக் கோரி வழக்கறிஞர் ஒருவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த ரஞ்சன் கோகாய் அமர்வு, சபரிமலை தொடர்பான வழக்கை ஜனவரி 22 ல் விசாரிப்பதாக ஏற்கனவே கூறிவிட்டோம். அப்போது மட்டும் தான் விசாரிக்க முடியும். அதற்கு முன் இது தொடர்பான எந்த மனுவையும் விசாரிக்கவோ, அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உத்தரவிற்கு தடை விதிக்கவோ முடியாது என தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
15-நவ-201803:59:45 IST Report Abuse
J.V. Iyer இன்னும் மக்களுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீது நம்பிக்கையும் நல்லெண்ணமும் இருக்கவேண்டும் என்ற எண்ணம் கிடையாது போலும். பாஜக அரசு என்னசெய்து கொண்டிருக்கிறது?? உடனே செயல் படவேண்டாமா?
Rate this:
Share this comment
Cancel
14-நவ-201820:16:54 IST Report Abuse
ஆப்பு ப.சி கைது செய்யத் தடை அதிரடி, சோனியா, ராகுல் ஜாமீன் அதிரடி விசாரிப்பு, நீதிபதி கர்ணன் வழக்கில் தண்டனை அதி வேக விசாரணை... ஆனா சபரிமல கேசில் கேரளாவைப் பத்தியோ, தென்னக சம்பிரதாயங்கள் பத்தியோ ஒண்ணும் தெரியாத நாலுபேர் திடீர்னு தூங்கி எந்திரிச்சு தீர்ப்பு சொல்லிட்டு ரிடையர் ஆயிடுவாங்க. அதை அடுத்த பேட்ச் ஆமோதிக்கும். என்ன செய்வது? பட்டா தான் தெரியும்...
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
14-நவ-201820:03:24 IST Report Abuse
Nallavan Nallavan சிவகங்கைச் சின்னப்பையனை விடுவித்து காசு பார்க்க வழி செய்யும் தீர்ப்பு என்றால் உடனே விசாரிக்கலாம் .......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X