கஜா புயல்: மீனவர்களுக்கு எச்சரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கஜா புயல்: மீனவர்களுக்கு எச்சரிக்கை

Added : நவ 14, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
கஜா புயல்,மீனவர், எச்சரிக்கை

சென்னை: தென்மேற்கு வங்க கடல் பகுதியில் கஜா புயல், தற்போது, சென்னைக்கு கிழக்கே 49 0கி.மீ தொலைவிலும், நாகை வடகிழக்கே 580 கி.மீ., தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரமாக 10 கி.மீ., வேகத்தில் நகர்கிறது. நாளை (நவ.,15) மாலை முதல் பாம்பன் - கடலூருக்கு இடையே கரையை கடக்க கூடும்.

இதனால் கடலூர், நாகை, காரைக்கால், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்று, மணிக்கு 80 கி.மீ., முதல் 90 கி.மீ., வரை வீசக்கூடும். சமயங்களில் 100 கி.மீ., வரை வீசக்கூடும். இந்த மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும். சில இடங்களில் கனமழை அல்லது மிக கனமழை பெய்யக்கூடும். மீனவர்கள், வரும் 15 வரை கடலுக்கு செல்ல வேண்டாம்.நவ.15மற்றும் 16 ல் இதர பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அடுத்த 3 நாட்கள் சென்னையிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
14-நவ-201816:18:58 IST Report Abuse
ஆரூர் ரங் கஜா புயலைதாக்குப்பிடிக்கும் தெர்மோகோல் படகுகளை அரசு இலவசமாகதரவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Gopal - Karur,இந்தியா
14-நவ-201815:53:04 IST Report Abuse
Gopal கஜா புயல் கண்டிப்பாக இலங்கையை நோக்கியே நகரும் , ஏன் என்றால் காற்றின் வேகம் புவிபரப்பின் அருகில் வரும்போது அதிகமாகும் சாட்டிலைட் படத்தை பார்க்கும் பொது ,சென்னை ,நாகையை விட இலங்கைக்கு மிக அருகில் காற்றுமண்டலம் உள்ளது ,எனவே 16 காலை இலங்கை நிலப்பரப்பை நெருங்கும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X