காஷ்மீர் வேண்டாம்: பாக்., மாஜி கிரிக்கெட் கேப்டன் அப்ரிதி| Dinamalar

காஷ்மீர் வேண்டாம்: பாக்., மாஜி கிரிக்கெட் கேப்டன் அப்ரிதி

Updated : நவ 14, 2018 | Added : நவ 14, 2018 | கருத்துகள் (45)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
காஷ்மீர், பாகிஸ்தான், கிரிக்கெட், வீரர், ஷாகித் அப்ரிதி, இந்தியா, மனிதநேயம், மாகாணங்கள்

லண்டன்: '' பாகிஸ்தானுக்கு காஷ்மீரை அளிக்க வேண்டாம். ஏற்கனவே இருக்கும் நான்கு மாகாணங்களை நிர்வாகம் செய்யவே பாகிஸ்தானுக்கு திறமை இல்லை,'' என, அந்நாட்டு கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிதி கூறியுள்ளார்.


மனிதநேயம் தான் முக்கியம்


பாகிஸ்தானில், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் தலைமையிலான அரசு உள்ளது. பாகிஸ்தானில் அதிரடியாக விளையாட கூடிய கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிதி, லண்டனில், மாணவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசியதாவது:


பாக்.,கிற்கு வேண்டாம்:


பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவை இல்லை என்றே நான் கூறுவேன். அதே நேரத்தில், இந்தியாவிடமும் காஷ்மீரை தர வேண்டாம். காஷ்மீர் சுதந்திரமாக இருக்கட்டும். மனித நேயம் உயிர்ப்புடன் இருக்க வேண்டும். மக்கள் உயிர் இழக்கக் கூடாது.


பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை. தன்னிடம் இருக்கும் நான்கு மாகாணங்களை நிர்வாகம் செய்யவே பாகிஸ்தானுக்கு திறமை இல்லை. மனிதநேயம் தான் பெரிது. அங்கு (காஷ்மீர்) மக்கள் இறக்கின்றனர். இது வேதனை தருகிறது. இறப்பு என்பது எந்த சமூகமாக இருந்தாலும் வேதனை தருவது தான்.


இவ்வாறு அவர் பேசினார்.


சர்ச்சை பேச்சு புதிது அல்ல


ஷாகித் அப்ரிதி கடந்த ஏப்ரலின் போது, ' காஷ்மீரில் மோசமான சூழ்நிலை நிலவுகிறது. ஐ.நா., தலையிட வேண்டும்' என, டுவிட்டரில் கருத்து வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார். 2016ல்,' ஏராளமான காஷ்மீர் ரசிகர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு தான் ஆதரவு அளித்தனர்' என, கூறி இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

Advertisement




வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-நவ-201813:26:20 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் உனக்கு யார் கொடுக்கிறார்கள் வேண்டாம் என்று சொல்வதற்கு , மேலும் இந்தியாவின் மாநிலத்தை இந்தியாவிற்கு கொடுக்கக்கூடாது என்று முட்டாள்தனமாக பேசுகிறாய். பாகிஸ்தானின் மாநிலத்தை பாகிஸ்தானுக்கு கொடுக்காமல் ஆப்கானிஸ்தானுக்கு கொடுத்து விடலாமா ?
Rate this:
Share this comment
Cancel
தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர் - கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
15-நவ-201811:37:50 IST Report Abuse
தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர் பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டாம் என்று சொல்ல அவருக்கு உரிமை இருக்கலாம். ஆனால் இந்தியாவுடன் இணைக்க கூடாது என்று சொல்லும் தார்மீக உரிமை அவருக்கு இல்லை . என்னைநான் ஒரு அறை அறைந்து கொண்டேன் அதனால் உன்னை நான் இரண்டு அறை அறைய விரும்புகிறேன் என்பது போல் உள்ளது இவரது வாதம்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-நவ-201807:53:09 IST Report Abuse
Srinivasan Kannaiya அப்ரிதி இதை சொன்னதகன் மூலம் பாக்கிடம் கெட்ட பெயர் வாங்கிக்கொண்டார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X