விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி., மாக் 3 - டி2 ராக்கெட்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி., மாக் 3 - டி2 ராக்கெட்

Updated : நவ 14, 2018 | Added : நவ 14, 2018 | கருத்துகள் (26)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சென்னை: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான, 'இஸ்ரோ' சார்பில், அதிநவீன தகவல் தொடர்பு சேவைக்காக, 'ஜிசாட் - 29' என்ற செயற்கைகோள், இன்று(நவ.,14) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

தகவல் தொடர்பு, வானிலை, பாதுகாப்பு உள்ளிட்ட ஆய்வு பணிகளுக்காக, பி.எஸ்.எல்.வி., - ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்கள் உதவியுடன், செயற்கைகோள்களை, இஸ்ரோ நிறுவனம் விண்ணில் செலுத்தி வருகிறது. அதன்படி, அதிநவீன தகவல் தொடர்பு சேவைக்காக, 3,423 கிலோ எடையில், 'ஜிசாட் - 29' என்ற, செயற்கைகோள் தயாரிக்கப்பட்டு உள்ளது.

அந்த செயற்கைகோள், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள, ஏவுதளத்தில் இருந்து, 'ஜி.எஸ்.எல்.வி., மாக் 3 - டி2' என்ற, ராக்கெட் உதவியுடன், இன்று மாலை, 5:08 மணிக்கு, விண்ணில் செலுத்தப்பட்டது. இதற்கான, 26 மணி நேர, கவுன்டவுண், நேற்று (நவ.,13) மதியம், 2:50 மணிக்கு துவங்கியது.

உயர் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள, ஜிசாட் - 29 செயற்கைகோள், குக்கிராமங்களையும் உள்ளடக்கி, நாடு முழுவதும், அதிநவீன தகவல்தொடர்பு சேவையை மேம்படுத்த, முக்கிய பங்காற்றும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. ரூ.400 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கை கோளின் ஆயுள்காலம் 10 ஆண்டுகள்.


மகிழ்ச்சி


இதன்பின்னர் இஸ்ரோ தலைவர் சிவன் கூறியதாவது: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜிஎஸ்எல்வி விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு விஞ்ஞானிகளின் உழைப்பே காரணம். சநதிராயன் விண்கலத்திலும் ஜிஎஸ்எல்வி மாக் 3 தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். 3 ஆணடுகளில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப முடியும். மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டம் மூலம், இந்த செயற்கைகோள் மூலம், காஷ்மீர்,வடகிழக்கு மாநிலங்களில் சேவை வழங்கப்பட உள்ளது. சுதந்திர தினத்தன்று, கங்கயான் திட்டத்தை அறிவித்து பிரதமர் நமக்கு பெரிய பரிசு வழங்கினார். இதற்கான குழு கண்டுபிடிக்கப்பட்டதுடன், பணிகள் நடந்து வருகின்றன. 2020 டிச.,க்குள் கங்கயான் செயல்படுத்தப்படும். இதற்கான திறன் இஸ்ரோவுக்கு உள்ளது. என்றார்.


பிரதமர் வாழ்த்து


பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கை: ஜிசாட் -29 செயற்கைகோளுடன் ஜிஎஸ்எல்வி மாக் 3 டி2 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதறகு மனதார பாராட்டுகள். இந்தியாவில் உருவாக்கப்பட்ட வாகனம் மூலம், பெரிய செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
15-நவ-201812:04:43 IST Report Abuse
ganapati sb கடினமாக உழைத்தால் முதல் வெற்றி பெற கூடும் அனால் தொடர்ந்து வெற்றியை பெற தக்கவைக்க மிக கவனமாக உழைக்க வேண்டும் அவ்வகையில் தெடர்ந்து கடினமாக கவனமாக உழைத்து சாதிக்கும் நமது விண்வெளி ஆராய்ச்சி விஞ்சானிகளுக்கு பாராட்டுக்கள்
Rate this:
Share this comment
Cancel
ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) வாழ்த்துக்கள்...
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - Mangaf,குவைத்
14-நவ-201820:17:21 IST Report Abuse
balakrishnan வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X