தனியார் பள்ளியில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு: அரசு பஸ் டிரைவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தனியார் பள்ளியில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு: அரசு பஸ் டிரைவர் கைது

Updated : நவ 14, 2018 | Added : நவ 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
தனியார் பள்ளியில்  4 பேருக்கு அரிவாள் வெட்டு: அரசு பஸ் டிரைவர் கைது

நாகர்கோவில்:அருமனை அருகே தனியார் பள்ளிக்குள் புகுந்து, இரண்டு மாணவியர் உட்பட, நான்கு பேரை அரிவாளால் வெட்டிய அரசு பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

குமரி மாவட்டம், அருமனை அருகே, சிதறாலில் தனியார் சி.பி.எஸ்.இ., மேல்நிலைபள்ளியில் காலை, 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கான சிறப்பு வகுப்புகளுக்கு மாணவர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென பள்ளி வளாகத்திற்கு வந்த, இதே பள்ளி ஆசிரியை ஒருவரின் கணவரும், அரசு பஸ் டிரைவருமான ஜெயன், 48, பள்ளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த. மூன்று வேன்களின் கண்ணாடிகளை உடைத்தான்.பின், வளாகத்தில் இருந்த வீட்டில் புகுந்து, அங்கிருந்த வாஷிங் மிஷின், கம்யூட்டர் உள்ளிட்ட பொருள்களையும், வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளையும் உடைத்து சேதப்படுத்தினான்.
மாணவியர் இருவருக்கு வெட்டு அப்பகுதியில் நின்று கொண்டிருந்த, திற்பரப்பைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவியர் இருவரை, அரிவாளால் வெட்டினான். அவனை தடுத்து முயன்ற, 65 வயதான, ஓய்வு பெற்ற விமானப்படை ஊழியரையும், 45 வயது கூலித் தொழிலாளியையும் வெட்டியுள்ளான். இந்தச் சம்பவங்களைப் பார்த்த பள்ளி, மாணவ - மாணவியர் உயிருக்குப் பயந்து அலறியடித்து ஓடியுள்ளனர்.
சிலர் ஜெயனை தடுத்து நிறுத்தி, அரிவாளைப் பறித்து, அவனை பிடித்து ஒரு மரத்தில் கட்டி வைத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அருமனை போலீசார் வந்து ஜெயனை கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இச்சம்பவத்தில் தலை மற்றும் கையில் காயமடைந்த மாணவியர் இருவர் உட்பட நான்கு பேரும், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X