'தினமலர்' செய்தி எதிரொலி : சிறுவனுக்கு மருத்துவ உதவி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'தினமலர்' செய்தி எதிரொலி : சிறுவனுக்கு மருத்துவ உதவி

Added : நவ 14, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
'தினமலர்' செய்தி எதிரொலி : சிறுவனுக்கு மருத்துவ உதவி

சென்னை: 'தினமலர்' நாளிதழ் செய்தியை தொடர்ந்து, ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு, உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க, முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சேலம் மாவட்டம், ஓமலுார் தாலுகா, கோவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சந்திரகுமார்; எலக்ட்ரிஷியன். இவரது மகன் லோகேஷ். ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளான். கோவையில் உள்ள, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். 'கடன் வாங்கி, ஏழு லட்சம் ரூபாய் செலவழித்துள்ள சந்திரகுமார், மேற்கொண்டு சிகிச்சை அளிக்க வசதி இல்லாததால், தன் மகன் சிகிச்சைக்கு, அரசு உதவி செய்ய வேண்டும்' என, வேண்டுகோள் விடுத்தார். இதுகுறித்து, நமது நாளிதழில், செய்தி வெளியானது.
இதையடுத்து, முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையிலேயே, லோகேஷுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கும்படி, சுகாதாரத் துறை அமைச்சருக்கு, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-நவ-201820:35:59 IST Report Abuse
மதுவந்தி பாராட்டுக்கள் முதல்வருக்கு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X