கஜா புயல்: நள்ளிரவு முதல் மழைக்கு வாய்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கஜா புயல்: நள்ளிரவு முதல் மழைக்கு வாய்ப்பு

Updated : நவ 14, 2018 | Added : நவ 14, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
கஜா புயல், மழை

சென்னை: தென்மேற்கு வங்க கடல் பகுதியில் கஜா புயலானது, தற்போது, சென்னைக்கு கிழக்கே 430 கி.மீ தொலைவிலும், நாகை வடகிழக்கே 510 கி.மீ., தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது நாளை(நவ.,15) மாலை அல்லது இரவு, கடலூர் பாம்பன் கடற்கரை இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில், இன்று நள்ளிரவு முதல் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்து உள்ளது. மேலும் புயலின் வேகம் மணிக்கு 12 கி.மீ.,லிருந்து 13 கி.மீ.,ஆக அதிகரித்துள்ளது.


மிக கனமழை:


தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல ஊர்களில் நாளை மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும் கடலூர், நாகை, திருவாரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் 20 செ.மீ., மழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.



கஜா புயல் காரணமாக, 6 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை வழங்கப்பட்டு உள்ளது. பல்கலை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-நவ-201807:52:01 IST Report Abuse
Srinivasan Kannaiya அடுத்து வரும் புயலின் பெயர் என்ன
Rate this:
Share this comment
Cancel
ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) இத்தனை நாட்களுக்கு முன்பே தெரிந்த இந்த புயலிலாவது மக்கள் பாதிக்கப்படாமல் இந்த அரசாங்க அதிகாரிகள் செயல்படுவார்களா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X