இரவு 8 - 11 மணிக்குள் புயல் கரையை கடக்கும் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இரவு 8 - 11 மணிக்குள் புயல் கரையை கடக்கும்

Updated : நவ 15, 2018 | Added : நவ 15, 2018 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 Gaja Storm, Heavy rain, Cyclonic storm,  தமிழகம், கஜா புயல் , கனமழை ,  புயல் எச்சரிக்கை , கஜா, புயல், நாகை, சென்னை வானிலை ஆய்வு மையம், புவியரசன் , இந்திய வானிலை ஆய்வு மையம், 
Tamil Nadu, Indian Meteorological Center, Storm Warning,Cyclone Gaja, Bay Of Bengal Cyclone, Cyclone, 
Gaja, Storm, Nagai, Chennai Weather Center, puviyarasan

சென்னை: நாகை அருகே இன்று (நவ., 15) இரவு 8 முதல் 11 மணிக்குள் கஜா புயல் கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தற்போது( மாலை 5.45 மணி நிலவரம்) இந்த புயல் நாகையில் இருந்து 138 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 11 கி.மீ. வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:வங்க கடலில் மையம் கொண்டுள்ள கஜா புயல், இன்று இரவு 11.30 மணிக்கு கடலூர் - பாம்பன் இடையே, நாகை அருகே கஜா புயல் கரையை கடக்கும். அப்போது மணிக்கு 90 கி.மீ., முதல் 100 கி.மீ., வரையான வேகத்தில் காற்று வீச கூடும். பல இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கன மழை பெய்ய கூடும். கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், காரைக்கால் பகுதிகளில் மழை பெய்ய கூடும். கஜா புயலால் சென்னைக்கு அதிகமான தாக்கம் இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில், இரவு 11.30 மணிக்கு பதிலாக, கஜா புயல் இரவு 8 மணி முதல் 11 மணிக்குள் கரையை கடக்கும் என சென்னை வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.



உடனுக்குடன் தகவல்



இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை அதிகாரி ரமேஷ் மற்றும் சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது:கஜா புயல் தற்போது நாகையிலிருந்து 138 கி.மீ., தூரத்தில் நிலைகொண்டுள்ளது. இது நாகப்பட்டினம் கடற்கரையை நோக்கி 11 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வருகிறது. இரவு 8 முதல் 11 மணிக்குள் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, மணிக்கு80 முதல் 90 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். கடலூர், நாகப்பட்டினம்,காரைக்கால், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இந்த புயல், நாளை இரவு அரபிக்கடலுக்குள் செல்லக்கூடும். புயல் குறித்த எச்சரிக்கை தகவல்கள் உடனுக்குடன் மாநில அரசிற்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது. மீட்பு பணிகளில் தமிழக அரசு சிறந்து விளங்குகிறது. புயல் காரணமாக சென்னைக்கு பாதிப்பு இல்லை. சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-நவ-201817:10:32 IST Report Abuse
Ganesan Madurai இந்த புயலுக்கு பெயர கட்டுமரம் இல்ல 2ஜீ ராசா வச்சிறுகணும். பெயரெ கிளுகிளுப்பா கீதேபா. கஜாகஜா கஜாகஜா. செம ஜோர்பா.
Rate this:
Share this comment
Cancel
கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா
15-நவ-201815:04:44 IST Report Abuse
கும்புடுறேன் சாமி வெள்ளக்கார புயலா இருந்தா சொன்ன டைம்முக்கு கரெக்ட்டா வந்துரும் கஜா நம்மாளு லேட்டாத்தான் வரும்
Rate this:
Share this comment
Cancel
sivam - baghram,ஆப்கானிஸ்தான்
15-நவ-201811:06:57 IST Report Abuse
sivam ஆமா ஆமா எல்லோரும் ரொம்ப carefull ஆ இருங்க, கஜா புயல் இன்னைக்கு மார்னிங் நம்ம புவியரசன பார்த்து நேரடியா சொல்லிருக்கும்போல, அதுதான் அவரு எல்லாருக்கும் எச்சரிக்கை விடுறாரு, வெட்டி சம்பளம் வாங்கிட்டு விருதா பேச்சு,,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X