7 மாவட்டங்களில் 20 செ.மீ.,க்கு மேல் மழை பெய்யும்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

7 மாவட்டங்களில் 20 செ.மீ.,க்கு மேல் மழை பெய்யும்

Added : நவ 15, 2018 | கருத்துகள் (13)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சென்னை : கஜா புயல் இன்று இரவு கரையை கடக்க உள்ளதால் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் 20 செ.மீ.,க்கு மேல் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கஜா புயல் காரணமாக அதிகபட்சமாக கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் 20 செ.மீ.,க்கும் அதிகமாக மழைபெய்யும். காரைக்கால் மாவட்டத்திலும் 20 செ.மீ., க்கும் அதிகமாக மழை பெய்யும். தமிழகம் மற்றும் புதுச்சேரியின் மற்ற பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கேரளா, ஆந்திரா, ராயலசீமாவிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நவ.,16 ம் தேதியும் கனமழை முதல் மிக கனமழை தொடரும்.
கஜா புயலால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காற்றின் வேகம் மணிக்கு 45 - 55 கி.மீ., ஆக இருக்கும். 65 கி.மீ., வரை காற்றின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. நவ.,15 ம் தேதி மாலை இது படிப்படியாக 80 முதல் 90 கி.மீ., வரையிலும், பின்னர் 100 கி.மீ., வரையிலும் அதிகரிக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஜா புயல் காரணமாக புயல் பாதிப்புள்ள மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் 4 மணிக்குள் வீடு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. புயல் பாதிப்பு மீட்புப் பணிகளில் உள்ளவர்கள் தவிர மற்ற ஊழியர்கள் அனைவரையும் 3 மணிக்கே வீ்ட்டிற்கு அனுப்ப நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கூமுட்டை - Panchgani,இந்தியா
15-நவ-201817:23:19 IST Report Abuse
கூமுட்டை  இதையே தான் ஒரு வாராமா சொல்லி உதார் விடுக்கிட்டே இருக்கான்..இன்னும் ஒரு சொட்டு மழை கூட பெய்யவில்லை...
Rate this:
Share this comment
Cancel
VIVEKANANTHAN - Chennai,இந்தியா
15-நவ-201816:25:03 IST Report Abuse
VIVEKANANTHAN குணா நீங்கள் சொல்வது சரிதான். நமது நாட்டு செயற்கைகோள் பயன் இதுவென்று இதுவரை இஸ்ரோ கூறியதில்லை. நானும் ஒருமுறை விவசாய நலனுக்காக செயற்கைகோள் தகவல் பெற முயற்சித்து தோற்றுப் போனேன். அவர்கள் விடும் செயற்கைகோள்கள் வெறும் விளம்பரத்திற்காகத் தான். இது பொய்யென்று கூற நினைப்போர் ஒருமுறை முயற்சித்து பார்க்கவும். அவர்களுக்கே முழுவிவரம் தெரிவதில்லை. செயற்கைகோள் பலன்களை மக்கள் அறியுமாறு செய்யவேண்டும். வீண் விளம்பர செயற்கைகோள் செலவுகளை தவிர்க்கலாம். .
Rate this:
Share this comment
Cancel
கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா
15-நவ-201815:06:26 IST Report Abuse
கும்புடுறேன் சாமி சேது சமுத்திர திட்டம் வந்திருந்தா கஜா புயல் அந்த வழியா போயிருக்கும் ம்ம்.. காவிகள் சதி செஞ்சுட்டாங்க
Rate this:
Share this comment
Dubuk U - Chennai,இந்தியா
15-நவ-201815:28:12 IST Report Abuse
Dubuk Uஇது போன்ற பதிவு, நீ பதிவு செய்யும் சில நல்ல கருத்துக்களுக்கு மரியாதை இல்லாமல் செய்து விடுகிறது .....
Rate this:
Share this comment
JSS - Nassau,பெர்முடா
15-நவ-201820:12:16 IST Report Abuse
JSSசேது சமுத்திர திட்டம் ஊழல் செய்வதற்காகவே போடப்பட்ட திட்டம். புயல் கூட அந்த வழியா போவாது. ஊழலுக்கு வழிவகுத்த மக்களை புரட்டி போடும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X