கஜா புயல்: பஸ்கள் நிறுத்தம்,மின்சாரம் துண்டிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கஜா புயல்: பஸ்கள் நிறுத்தம்,மின்சாரம் துண்டிப்பு

Updated : நவ 15, 2018 | Added : நவ 15, 2018 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
கஜா புயல், பஸ் சேவை, அமைச்சர், உதயகுமார்

சென்னை: கஜா புயல் காரணமாக நாகை, கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், ராமேஸ்வரம், காரைக்கால், புதுக்கோட்டை பகுதிகளில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் மற்றும் ராமேஸ்வரம், பாம்பன்,மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. திருவாரூரிலும் காற்று காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.


அறிவுரை

முன்னதாக அமைச்சர் உதயகுமார் கூறியதாவது: 7 கடற்கரை மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களை 4 மணிக்குள் வீடு திரும்பும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளன. கடல்சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால், பொது மக்கள், சுற்றுலா பயணிகள் கடற்கரை பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு போலீசார் கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்


மின் இணைப்பு துண்டிப்பு

சம்பந்தப்பட்ட 7 மாவட்டங்களில் அனைவரும் பாதுகாப்பாக வீடு திரும்பியதை உறுதி செய்த பின்னர் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை பஸ் போக்குவரத்தை நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பஸ்களை மரங்களுக்கு அருகில் நிறுத்துவதை தவிர்க்கவும் கூறியுள்ளோம்.

மக்களும் மரங்களுக்கு கீழ் நிற்க வேண்டாம். 7 மாவட்டங்களிலும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். பாதுகாப்பு கருதி சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்படும்.


தவிர்க்க வேண்டும்

புயல் கரையை கடக்கும் நேரத்தில் மக்கள் வெளியே வர வேண்டாம். இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.வெளியூர் சென்றவர்கள், அங்கேயே பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்க வேண்டும்.


ஆம்புலன்ஸ்கள் தயார்

சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. அனைத்து 108 ஆம்புலன்ஸ் வாகனங்களிலும் முழுமையாக டீசல் நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மீட்பு பணிக்காக 108, 104 சேவைகள் தயார் நிலையில் உள்ளன.

தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டாலும், அருகில் உள்ள போலீஸ் ஸ்டேசன்களில் ஆம்புலன்சுகளை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 104 மருத்துவ உதவி மையம் மூலம் 24 மணி நேரமும், மருத்துவ உதவிகள் வழங்கப்படும். 108 தொழில்நுட்ப பிரிவு பொறியாளர்கள், தொலைதொடர்பு நிறுவனங்களுடன் தொடர்பில் இருப்பார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
guru - thiruvallore,இந்தியா
15-நவ-201819:58:44 IST Report Abuse
guru இதெல்லாம் இடை தேர்தலுக்காக, மக்களே உஷார்
Rate this:
Share this comment
Cancel
Welcome Back to 1900AD - korkai,இந்தியா
15-நவ-201819:53:49 IST Report Abuse
Welcome Back to 1900AD முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் பாராட்டுக்கள்.
Rate this:
Share this comment
Cancel
Nisha Rathi - madurai,இந்தியா
15-நவ-201818:07:45 IST Report Abuse
Nisha Rathi அரசு எவ்வளவு முன்னெச்சரிக்கை எடுத்தாலும் புயல் நேரத்தில் மீட்புப்பணி செய்ய R S S தொண்டர்கள் தவிர யாரும் உயிரை பணயம் வைத்து பணிபுரிய யாரும் வரமாட்டார்கள் ஓசி சோறு கூட்டம், சுடாலின் கூட்டம் யாரும் தலைகாட்டமாட்டார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X