மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு

Updated : நவ 16, 2018 | Added : நவ 16, 2018 | கருத்துகள் (11+ 75)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சபரிமலை: மகர விளக்கு மற்றும் மண்டல பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று (நவ.16) மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. அங்கு பக்தர்கள் குவிந்துள்ளனர்.


கெடுபிடி

சபரிமலைக்கு வந்த பக்தர்கள் பம்பையில் நிறுத்தப்பட்டு, மதியத்திற்கு மேல் தான் அனுப்பி வைக்கப்பட்டனர். பத்திரிகையாளர்கள் வாகனமும் நிலக்கல்லில் தடுத்து நிறுத்தப்பட்டது. பம்பைக்கு செல்ல முடியவில்லை. பத்திரிகையாளர்கள் வாகனம் பம்பை வரை அனுமதிக்கப்படுவது வழக்கம். இந்த முறை பத்திரிகையாளர்களுக்கு கெடுபிடி அதிகரித்துள்ளது.
நேற்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிறகு, சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க முடிவு செய்திருப்பதாக கேரள அரசு அறிவித்தது.


பதட்டம்:

இதற்கிடையில், நவ.17 ல் சபரிமலை செல்ல உள்ளதாக அறிவித்திருந்த திருப்தி தேசாயும் இன்று கொச்சி வந்துள்ளதால் கேரளாவில் பதற்றம் அதிகரித்துள்ளது. சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவை எதிர்த்து ஏற்கனவே போராட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில், கேரள அரசின் முடிவை எதிர்த்தும் தற்போது பல்வேறு கட்சிகளும், இந்து அமைப்புக்களும் போராட்டம் நடத்தி வருகின்றன.

திருப்தி தேசாய் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொச்சி விமான நிலையம் முன் அதிகாலை முதலே போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. விமான நிலையத்தை விட்டு வெளியேற முடியாமல், திருப்தி தேசாய் கொச்சி விமான நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் திருப்தி தேசாயை திரும்பி செல்லுமாறு கேரள போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

போராட்டங்களால் பதற்றம் அதிகரித்துள்ளதால் சபரிமலையில் நிலக்கல், பம்பை, சன்னிதானம் உள்ளிட்ட கோயிலை சுற்றிய பல பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (11+ 75)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sumutha - chennai - Chennai,இந்தியா
17-நவ-201805:59:30 IST Report Abuse
sumutha - chennai தயவுசெய்து நன்றாக சட்டமறிந்த வழக்கடுபவர்களில் ஐயப்ப பக்தர்கள் இருப்பீர்கள். உங்களில் ஏன் ஒருவர் கூட இதற்கு சட்டப்படி அனைத்து பக்தர்கள் (ஒழுக்கமான பெண்கள் உட்பட) ஒரே மனநிலையில் இருப்பதை எடுத்து நாட்டின் தலைமை நீதிமன்றத்தில் சட்டபூர்வமாக எடுத்து வைத்து உடனடியாக நல்ல தீர்ப்பை பெற்று தாருங்கள்
Rate this:
Share this comment
Cancel
Amar Akbar Antony - Udumalai kovai,இந்தியா
16-நவ-201820:13:14 IST Report Abuse
Amar Akbar Antony மெதுவாக நிதானமாக கேரள பெண்களின் எதிர்ப்பை கண்டு ரெஹனா மீது வழக்கு பதிவு: அவரை சந்நிதானத்திற்கு அழைத்துச்சென்ற அதுவும் போலீஸ் உடையணிந்து கூட்டிசென்றவர்களுக்கு? கம்யூனிசம் பின்வாங்குகிறது:என்னதான் சொன்னாலும் கேரளா அரசு செய்தது செய்துகொண்டிருப்பது மிக பெரிய தவறு:ஏற்கனவே சொல்லியபடி நோட்டுக்கும் பிரியாணிக்கும் சுயமரியாதையை அடகு வைப்பவர்களல்ல ஐய்யப்பபக்தர்கள்:அமைதியும் கட்டுப்பாடும் குடும்பத்தையும் காத்து அருளுகின்ற ஐய்யப்பனுடைய கோடான கோடி பக்தர்கள் அதற்குண்டான ஆச்சாரத்தையும் பக்திகொண்டு காப்பார்கள்:
Rate this:
Share this comment
Cancel
Amar Akbar Antony - Udumalai kovai,இந்தியா
16-நவ-201820:01:38 IST Report Abuse
Amar Akbar Antony தேசாய் மற்றும் ஆறு பெண்கள் வந்த வழியே திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர்: ஸ்வாமியே சரணம் ஐயப்ப பக்த்தர்களுக்கு ஒரு பெரிய சரணம்: இது ஒரு தொடக்கம் தான்:
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X