வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது

Added : நவ 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

காரியாபட்டி: மதுரை ரயில்வே ஸ்டேசன், விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகரை சேர்ந்த ஒருவர், சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறையை நேற்று இரவு 8 மணிக்கு தொடர்பு கொண்டு, " விருதுநகரில், என் அருகில் இருந்த ஒருவர் அலைபேசி மூலம், மற்றொருவரிடம் 'இன்று(நவ.,15) மதுரை விமான நிலையம், ரயில்வே ஸ்டேசன், காரியாபட்டி தனியார் மில் கிய இடங்களில் வெடிகுண்டுவைக்க போவதாக', பேசிக்கொண்டனர்", என தெரிவிததார். இதையடுத்து அனைத்து இடங்களிலும் சோதனை நடந்தது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், விருதுநகர், காரியாபட்டி அருகேயுள்ள நாகனேந்தல் பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசரை போலீசார் கைது செய்தனர். இவர் பலரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்டதும், பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி தரவே அவர்களை மாட்டிவிடுவதற்காக மிரட்டல் விடுத்ததும் தெரியவந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X