நாகையில் அமைச்சர் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நாகையில் அமைச்சர் ஆய்வு

Added : நவ 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
  Minister Udayakumar,Gaja Storm, Nagai,நாகை ,  கஜா புயல், அமைச்சர் உதயக்குமார், ராதாகிருஷ்ணன், மின் வினியோகம்,  கனமழை ,வானிலை,  கஜா, புயல்,   புயல் பாதிப்பு ,  கஜா புயல் பாதிப்பு , வடகிழக்கு பருவமழை, gaja cyclone , cyclone gaja , Chennai weather, Heavy Rain, kajas, storm, weather, storm impact, hurricane storm, northeast monsoon,சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,
Radhakrishnan, Power Distribution, Electricity, EB,

நாகை : நாகை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் உதயக்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல் கட்டமாக மின்வினியோகத்தை சீர்செய்யும் பணி நடைபெற்று வருகிறது. புயல் சேத கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. கள நிலவரம் குறித்து முதல்வருக்கு தெரிவித்து வருகிறோம். போக்குவரத்தை சீர்செய்ய முன்னுரிமை அளித்து சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மீட்புப் பணிகள் தொய்வின்றி நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

தொடர்ந்து பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கஜா புயலால் பாதிக்கப்பட்டு நோய் வாய்ப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களை தேடிச் சென்று சுகாதார சேவைகள் வழங்கப்படுகின்றன என்றார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X