காங்கிரசால் மக்களுக்கு பயன் இல்லை: பிரதமர்| Dinamalar

காங்கிரசால் மக்களுக்கு பயன் இல்லை: பிரதமர்

Added : நவ 18, 2018 | கருத்துகள் (83)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பிரதமர், மோடி, காங்கிரஸ்

மகசமுந்த்: காங்கிரசை சேர்ந்த ஒரு குடும்பத்தின் 4 தலைமுறையினர் ஆட்சி செய்த போது, அவர்கள் தான் பயனடைந்தனரே தவிர, மக்கள் பயன்பெறவில்லை என பிரதமர் மோடி கூறியுள்ளார்.



சத்தீஸ்கர் மாநிலம், மகசமுந்த் என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், அவர் பேசியதாவது:

காங்கிரஸ் தலைவராக சீதாராம் கேசரி இருந்த போது, அவரின் 5 ஆண்டுபதவிக்காலத்தை அக்கட்சி நிறைவு பெற செய்யவிடவில்லை. பல நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. சோனியா புதிய தலைவராக வேண்டும் என்பதற்காக சீதாராம் கேசரி பாதியிலேயே துாக்கி வீசப்பட்டார். முன்னர், டில்லியில் ரிமோட் கன்ட்ரோல் மூலம் நடக்கும் ஆட்சி நடந்தது. இந்த ரிமோட் ஒரு குடும்பத்தின் கைகளில் இருந்தது. அவர்களுக்கு பா.ஜ., மீது பயம் ஏற்பட்டது. ஒரு குடும்பத்தை சேராத திறமை வாய்ந்த ஒருவரை, தலைவராக காங்கிரஸ் நியமிக்க முடியுமா.

காங்கிரசை சேர்ந்த ஒரு குடும்பத்தின் நான்கு தலைமுறை ஆட்சி செய்ததை எண்ணிப்பாருங்கள். மக்களுக்கு என்ன பலன் கிடைத்தது? அவர்கள் ஒரு குடும்பத்தின் நலனை மட்டுமே சிந்தித்தனர். மக்கள் நலத்திட்டங்கள் கிடைப்பதை பற்றி சிந்திக்கவில்லை. இவர்கள் மூலம் மக்களுக்கு என்ன பயன் கிடைக்கும் என்பதை எப்படி எதிர்பார்க்கமுடியும்.



சத்தீஸ்கரின் வளர்ச்சிக்கு பா.ஜ., உறுதி பூண்டுள்ளது. ரமண் சிங்கும் மாநிலத்திற்காக ஏராளமான உழைத்துள்ளார். மாநிலம் வலுப்பெற வேண்டும் என்றால், ரமண் சிங்கிற்கு ஒட்டளிக்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சி மூலமும் ரமண் சிங்கிற்கு பல நெருக்கடி ஏற்பட்டது. நக்சல்களை ஒழிக்க மத்திய அரசின் உதவியை அவர் கோரினார். ஆனால், டில்லியில் ரிமோட் கன்ட்ரோல் ஆட்சி, சத்தீஸ்கரை இந்தியாவின் ஒரு பகுதியாக கருதவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (83)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Varatharaajan Rangaswamy - Tiruchirappalli ,இந்தியா
19-நவ-201815:28:38 IST Report Abuse
Varatharaajan Rangaswamy கடந்த 70 ஆண்டுகளாக நமது நாட்டின் எல்லாத் துறைகளிலும் திறமையின்மையும் ஊழலும் மலிந்துவிட்டதற்குக் காரணம் காங்கிரஸ்தான் என்பதை ஒளிவு மறைவில்லாமல் சொல்லி, மக்களின் ஆதரவை பெற்ற பிரதமர் நரேந்திர மோதிக்கு இன்னும் பல ஐந்தாண்டுகள் மக்கள் ஆதரவு தந்து, 2019 பொதுத் தேர்தலில் அமோகமாக வெற்றி பெறச் செய்வார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
Rate this:
Share this comment
Cancel
Kailash - Chennai,இந்தியா
19-நவ-201808:32:29 IST Report Abuse
Kailash பாஜக ஆட்சி வெத்துவேட்டு என்று மக்கள் புரிந்துகொண்டார்கள்... 5 வருடம் முன்பு இருந்த நிலைமையை விட படு பாதாளத்தில் உள்ளது கேட்டால் காங் அரசால் வந்ததாம்... டாலர் இப்போ ஏறியிருக்கு... பல தொழில்கள் முடங்கி கிடைக்கிறது என்று சொன்னால் கறுப்புப்பணம், வரி கட்டாதவர்கள் என்று பாய்கிறார்கள்... சிந்திக்கும் திறன் இல்லாதவர்கள் இன்னமும் நம்பி கைதட்டிக்கொண்டு இருக்கிறார்கள். 3
Rate this:
Share this comment
Cancel
Kailash - Chennai,இந்தியா
19-நவ-201808:32:22 IST Report Abuse
Kailash பாஜக ஆட்சி வெத்துவேட்டு என்று மக்கள் புரிந்துகொண்டார்கள்... 5 வருடம் முன்பு இருந்த நிலைமையை விட படு பாதாளத்தில் உள்ளது கேட்டால் காங் அரசால் வந்ததாம்... டாலர் இப்போ ஏறியிருக்கு... பல தொழில்கள் முடங்கி கிடைக்கிறது என்று சொன்னால் கறுப்புப்பணம், வரி கட்டாதவர்கள் என்று பாய்கிறார்கள்... சிந்திக்கும் திறன் இல்லாதவர்கள் இன்னமும் நம்பி கைதட்டிக்கொண்டு இருக்கிறார்கள். 2
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X